99 சாங்ஸ் (பட விமர்சனம்)

15

படம்: 99 சாங்ஸ்
நடிப்பு: ஏஹன் பட், எடில்சி வர்காஸ். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே
இசை: ஏ.ஆர்.ராஹ்மான்
ஒளிப்பதிவு: தானே சதம். ஜேம்ஸ் கவுலே
தயாரிப்பு: ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்: விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி
ரிலீஸ்: ஜியோ ஸ்டூடியோஸ்
இசையால் குடும்பம் சொத்து எல்லாம் இழந்துவிட்டோம் அப்படிப்பட்ட இசையை நீ உன் வாழ்நாளில் கற்றுக் கொள்ளாதே என்று சிறு வயதிலே மகன் ஏஹனிடம் சத்தியம் பெறுகிறார் அவரது தந்தை. ஆனாலும் தந்தைக்கு கொடுத்த வாக்கை மீறி இசை கலைஞன் ஆகிறார் ஏஹன். இசையை ரசிக்கும் காதலி எடில்சி அவரை மணக்க எண்ணுகிறார். ஆனால் அதற்கு பெண்ணின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். தன் மகள் பணக்காரவீட்டுப்பெண் அவரை மணக்க வேண்டு மென்றால் அதற்கு நீ 100 பாடல்கள் பாட வேண்டும் அதில் ஒன்று இந்த உலகத் தையை உற்றுநோக்க வைக்கும் பாடலாக இருக்க வேண்டும் என்கிறார். அந்த 100 பாடல்களை ஏஹன் எப்படி எழுத்துகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
இசையின் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சிந்தனையில் உதித்த கதை 99 சாங்க்ஸ். இசையையே பக்கபலமாக வைத்து உருவாகி இருக்கிறது. சில கிளைக் கதைகளும் காட்சிகளை சுவரஸ்யமாக கொண்டு கதை நகர்த்தப் படுகிறது.


ஹீரோ ஏஹன் இளவட்ட துடிப்புடன் காணப்படுகிறார். பியானோ வாசிப்பதில் திறமைசாலியான அவரது வாசிப்பில் மனதை பறிகொ டுக்கிறார். இளம் பெண் எடில்டி இசை ரசிகையாக என்ட்ரி தருகிறார். எடில்சி யுடன் ஏஹன் திருமணம் செய்ய முடிவு செய்கிறார். டக்கென்று திருமணம் முடிந்து கதை வேறு திசைக்கு போகும் என்று எண்ணும்போது திருமணத்து கண்டிஷன் போடுகிறார் எடில்சியின் தந்தை. 100 பாடல்கள் பாட வேண்டும் அதில் ஒரு பாடல் இந்த உலகத்தையே ஆட்டி வைக்கும் பாடலாக இருக்க வேண்டும் அதுவரை என் மகளை நீ பார்க்ககூடாது என்று நிபந்தனை விதிக்க அதை ஏஹன் ஏற்கிறார்.
பாடல் எழுத தனது நண்பருடன் அவரது ஊருக்கு சென்றதும் கதை திசை மாறு கிறது. அங்குள்ள ஒரு ஓட்ட லில் பாடல் அழகியுடன் ஏஹனுக்கு நட்பு ஏற்படுகிறது. இது என்ன உறவென்று தெரியவில்லை ஆனால் ஏஹனுக்கு ஊக்கம் தரும் உறவாக இருக்கிறார். திடீரென்று இருவரும் கார் விபத்தில் ரத்த வெள்ளத்தில் கிடப்பது அதிர்ச்சி. எப்படி இந்த விபத்து ஏற்பட்டது. குடிக்கும் பழக்கம் கூட இல்லாத ஏஹன் போதை மருந்துக்கு அடிமையானது எப்படி என்ற கேள்விகளுக்கு பின்வரும் காட்சிகள் பதில் சொல்கின்றன.
100 பாடல் சபதத்தை ஏஹன் நிறைவு செய்ய அதில் ஒரு பாடல் அரசியல்வாதியின் வாழ்கையையே புரட்டி போடுகிறது.
காதலியாக வரும் எடில்சி அழகில் கவர்கிறார். முழுக்க காதல் கதை என்பதால் ஆக்‌ஷ னுக்கு இடமில்லை. எல்லா ஆக்‌ஷனும் ரஹ்மானின் இசையாக மாறி மாரியாக பொழிகிறது.
தானே சதம். ஜேம்ஸ் கவுலே ஒளிப்பதிவு ஹாலிவுட் தரம். படத்தின் திரைக்கதையும் ஹாலிவுட் பாணியிலேயே  அமைந்திருப்பதுடன் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கமும் அதே பாணியில் உள்ளது,
99 சாங்க்ஸ்- காதலை வெல்லும் இசை.

Leave A Reply

Your email address will not be published.