பத்மஸ்ரீ விவேக் ஆரம்பித்த நற்பணிகள் தொடரும்

1 கோடி மரம் நடும் பணி தொடரும்

0

பத்மஸ்ரீ .விவேக்  திடீர் மறைவு நம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவர் மறைந்தாலும் அவர் செய்து வந்த நலத்திட்டப்பணிகள் எந்தவித தொய்வின்றி நடக்க இருக்கின்றது.

கடந்த பதிமூன்று வருடங்களாக தமிழகமெங்கும் இதுவரைக்கும் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் திரு.விவேக் அவர்களால் நடப்பட்டிருக்கின்றன. இதற்காக பசுமை கலாம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவினரால் இயங்கி வருகின்றது.


இந்தக்குழுவில் செல் முருகன், தயாரிப்பாளர் லாரன்ஸ், அசோக் மற்றும் நண்பர்கள் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

இதையே தொடர்ந்து பசுமை கலாம் என்ற பெயரோடு விவேக் அவர்களின் பெயரையும் சேர்த்து செயல்படுத்த சட்ட ரீதியிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

புதிய பெயர் மாற்றத்தோடு விவேக்  லட்சியமான ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் பணிகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றது. இதற்கான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

இதனை பசுமை கலாம் அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.