மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியது ஏன்

கமீலா நாசர் விளக்கம்

1

மக்கள் நீதி மய்யம் கட்சியி லிருந்து விலகியது பற்றி கமீலா நாசர் விளக்கம் அளித்திருக்கிறார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :

என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன்.
இந்த நேரத்தில் அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், மற்றும் என்னுடன் சேர்ந்து பணி யாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷ மாக கருதி விடை பெறுகிறேன்.
நன்றிகள்..

இவ்வாறு கமீலா நாசர் கூறி உள்ளார். 

 

Leave A Reply

Your email address will not be published.