நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம்

நடிகர், நடிகைகள் வாழ்த்து

2

திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஷீலா பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா. விஸ்காம் மாணவியான இவருக்கும், தொழிலதிபர் என்.ஏ.சுதாகர், சீனா சுதாகரின் மகன் அகுல் சுதாகருக்கும் நேற்று (ஏப்ரல் 21ம் தேதி) மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வானகரம் எம்.வெட்டிங் கான்வென்சன்ஸ் ஹாலில் நடைபெற்ற இவ்விழாவில் நடிகர்கள் சரத்குமார், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, டி.ராஜேந்தர், நாசர், ராதாரவி, அருண்விஜய்,  ஆனந்தராஜ், பிரசன்னா, பரத், மனோபாலா, இளவரசு, மயில்சாமி,  ரமேஷ் கண்ணா, கருணாஸ், ஆர்.பாண்டியராஜன், சூரி, பூச்சி முருகன், வெற்றி, மாரிமுத்து, ராஜேஷ், போஸ் வெங்கட், வையாபுரி,  சாம்ஸ், சென்ராயன், லிவிங்ஸ்டன், அருதாஸ்,

நடிகைகள் சினேகா, தேவதர்ஷினி, குட்டிபத்மினி, சந்தியா, சாந்தினி,

இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், வி.சேகர், சித்ரா லட்சுமணன், ஆர்.பாண்டிராஜ், மோகன்ராஜா, ஜெகன், பிரேம்குமார்,  இயக்குனர்கள் வேல்ராஜ், அமுதேஸ்வர்

தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், டி.சிவா, தனஞ்செயன், அழகன் தமிழ்மணி,    இசையமைப்பாளர் தேவா, பாடகர் மனோ,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன்,  நக்கீரன் கோபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

விழாவுக்கு வந்தவர்களை எம்.எஸ்.பாஸ்கர், ஷீலா பாஸ்கர், என்.ஏ.சுதாகர், சீனா சுதாகர், ஆதித்யா பாஸ்கர், அக்சய் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.