சாத்தியமங்கலம் காட்டில் விஜய்சேதுபதி, சூரி..

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை சூட்டிங்

4

ஆர் எஸ் இன்போடெயின் மென்ட் (RS Infotainment )தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத் தில், வாத்தியாராக விஜய் சேதுபதி மற்றும் கதை யின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” !

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் முற்றிலும் மாறுபட்ட களங் களில், தன் தனித்த முத்தி ரை கொண்ட படங்களி னால் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்றுள் ளார். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆர் எஸ் இன்போடெயிமென்ட் ( RS Infotainment) நிறுவனம் சார்பில் அழுத்தமான கதைகள் கொண்ட வெற்றி படங்களை தந்து விமர்சர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கொண் டாடும், மிக சிறந்த தயாரிப் பாளராக மிளிர்ந்து வருகிறார். இவ்விருவரும் தற்போது ஒரு புதிய படத்தில் இணைந்துள் ளார்கள். “விடுதலை” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி பாத்திரத் தில் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்று கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியம்ங்கலத்தின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படமாக்கப் பட்டு வருகிறது. வெற்றி மாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானிஶ்ரீ உட்பட மொத்த படக்குழுவும் அங்கேயே குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி, தங்கி படப்பிடிப்பை நடத்துகின் றனர்.

“அசுரன்” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றி மாறன் மீண்டும் ஒரு வித்தியாசமான கதை களத்துடன், சீட் நுனியில் அமரவைக்கும், பரபர திரில்லான திரைக்கதை யுடன் ரசிகர்களை அசத்தவுள்ளார்.

வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கும் ஒளிப் பதிவு செய்கிறார். ஆர் .ராமர் படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்று கிறார். ஜாக்கி கலை இயக்கம் செய்கிறார்.

ளர் தயாரிப்பா எல்ரெட் குமார் இப்படத்தினை பிரமாண்ட முறையில், இந்தியாவெங்கும் தமிழ் மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.