93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர் அந்தோணி ஹாப்கின்ஸ்

siRawtha நடிகை பிரான்சிஸ் மெடோர்மெண்ட்

1

சர்வதேச அளவில் திரைத் துறையில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடக்கவிருந்த இந்த விழா கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சிறந்த கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

93-வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியான இதில் ஹாலி வுட் நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். விருது பெற்ற வர்கள் விவரம் வருமாறு:
சிறந்த படத்துக்கான விருதினை நோமெட்லெண்ட் படம் வென்றது. அதேபோல் அப்படத்தை இயக்கிய குளோயி சிறந்த இயக்குனருக் கான விருது வென்றார்.
நோமெட்லெண்ட் படத்தில் நடித்திருந்த பிரான்சிஸ் மெடோர்மெண்ட் சிறந்த நடிகையாக தேர்வானார்,.

’தி ஃபாதர்’ படத்தில் நடித்த  அந்தோணி ஹாப்கின்ஸ் சிறந்த நடிகர் விருது வென் றார். சிறந்த துணை நடிகையாக யங்-ஜுன் யோன் (மனாரி). சிறந்த துணை நடிகராக டெணியல் கலூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளக் மெசியா) தேர்வு பெற்று விருது தட்டி வந்தனர்.
சிறந்த உண்மை திரைக் கதைக்காக விருதை பிராமிசிங் யெங் உமன் படம் பெற்றது. சிறந்த தழுவல் திரைக்கதைக் கான தி ஃபாதர் படம் பெற்றது.
சிறந்த அணிமேஷன் பியூச்சர் திரைப்படம் சோல். சிறந்த சர்வதேச (வெளிநாட்டு) திரைப்படம் அனதர் ரவுண்ட்.
சிறந்த பாடல் பைட் பார் யூ (ஜூடாஸ் அண்ட் தி பிளக் மெசியா).

Leave A Reply

Your email address will not be published.