தயாரிப்பாளர் பாபு ராஜா மாரடைப்பில் மரணம்..

1

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய பாபு ராஜா என்கிற பாபா பக்ருதீன் இதய கோளாறு காரணமாக வடபழநி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் அதில் அவருக்கு 10 சதவீதம் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதை சரி செய்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவ மனையில் பெட் வசதி இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில், நேற்றிரவு மரணமடைந்து விட்டார்.
அவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும், ஜாவித் அஷ்ரப், ஜாகின் அஷ்ரப், ஜாபர் அஷ்ரப் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
53 வயதாகிய பாபுராஜா, தனது இரு மகன்களை வைத்து ‘திருப்பதி சாமி குடும்பம்’ என்ற படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அரசு, நினைத்து நினைத்துப்பார்த்தேன் ஆகிய படங்களையில் வர் தயாரித்திருந்தார். அவரது உடல் நேரடியாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக அவரது மகன் ஜாகின் அஷ்ரப் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.