ரெட்டை சுழி இயக்குனர் தாமிரா மரணம்

5

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன்முறையாக இணைந்து நடித்த படம் ரெட்டை சுழி. இப்படத்தை இயக்கியவர் தாமிரா. பத்திரிகையாளராக இருந்து இயக்குனராக ஆனவர்.  2018ம் ஆண்டு சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை என்ற படத்தையும் தாமிரா இயக்கி இருந்தார்.

சமீபத்தில் தாமிரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  மரணம் அடைந்தார். தாமிரா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனையிலிருந்து நேராக திருநெல்வேலிக்கு கொண்டுசெல்லப்படுகிறார். அவரது சொந்த ஊரில் இயக்குநர் தாமிராவின் இறுதிப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.