‘முதலும் முடிவும்’ காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பத்திற்கு திரையுலகினர் பாராட்டு!

0

முதலும் முடிவும் இசை ஆல்பத்தை பார்த்துதிரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர்.   நடிகர் ஹரிஷ கல்யாண்,நடிகர் பிரேம்ஜி, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ,இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன், மியூசிக் டைரக்டர் சபீர், இவர்கள் அனைவரும் இசையமைப்பாளர்  ஹரி எஸ். ஆர். யை பாராட்டி இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்

இந்தப் பொது முடக்க காலத்தில் படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் திரையுலகத் திறமையாளர்கள் முடங்கிப் போகாமல் இருக்க ஒற்றைப் பாடல்களாக வெளியிட்டு உலக பொதுவெளியில் பரப்புகிறார்கள்.அதற்கு உலக ரசிகர்களின் பரப்பில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது .அதற்கு ‘என்ஜாயி எஞ்சாமி ‘குக்கூ குக்கூ பாடல் அண்மை உதாரணம்.  இந்த வரிசையில் சேர்வதற்கு இன்று பலரும் தயாராகி வருகிறார்கள். அவ்வகையில்

‘முதலும் முடிவும்’ என்கிற பெயரில் காதல் மொழி பேசும் இனிமை சொட்டும் சுதந்திர ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது.

இதற்கும் இசையமைத்து உள்ளவர் ஹரி எஸ். ஆர். இசையின் மீது தீராத காதல் கொண்டுள்ள இவர், ஏராளமான இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். தமன், ஷபீர், கணேஷ் சந்திரசேகரன் போன்ற இசையமைப்பாளர்களிடம் திரைப்படங்களில்   பணியாற்றியவர். நிறைய மேடைகளில்  இசைக்குழுவில் இடம்பெற்றுத் தன் திறமையை வெளிப்படுத்தியவர். சங்கரா டிவி, SVBC டிவி  போன்ற தொலைக்காட்சிகளில் தோன்றி இசை நிகழ்ச்சிகள் வழங்கியவர்.

தன்னுடைய இசைக் கனவினை மனதில் சுமந்து கொண்டு இருந்தவர், படிப்பை முடித்த பின் இப்போது முழுநேர இசையமைப்பாளராக களத்தில் இறங்கி விட்டார். அப்படி இறங்கி ஐம்பது விளம்பரப் படங்களுக்கும் இருநூறு குறும் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

பாடல் மூலம்தான் ரசிகர்களைச் சென்றடைய முடியும் என்று இந்த ஒற்றைப் பாடல் ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார்.

இவர் தன்னுடைய திறமையைக் காட்ட முன்னோட்டமாக இந்த ‘முதலும் முடிவும்’  ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார்.

இந்த ஆல்பத்தில் ‘முதலும் நீ தான் முடிவும் நீ தான்’  என்று தொடங்கும் பாடலை உருவாக்கி இருக்கிறார்.

பாடலுக்கு வரிகள் ரேஷ்மன் குமார். ஒளிப்பதிவு இயக்குநர் மணிவண்ணன் .ஹரிகரன். ஐ படத்தொகுப்பு செய்திருக்கிறார். விளம்பர வடிவமைப்பு மற்றும் அனிமேஷன் வேலைகளை குஞ்சன் தோஷி செய்திருக்கிறார். வி.கே.ரெக்கார்ட்ஸ் சார்பில் காயத்ரி ஆர்.எஸ். தயாரித்துள்ளார்.

இந்தப் பாடலை  ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் ஆனந்த் அரவிந்த் தக்ஷன் பாடியுள்ளார். பெண்குரலாக ஆர்த்தி எம்.என். அஸ்வின் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் ஹரி இப்போது ‘பிள்ளையார்சுழி’,  ‘சோழ நாட்டான்’ என இரண்டு திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றிருக்கும் இவர், இந்தப் பாடல் தனக்குப்பெரிய வெளிச்சத்தைத் தேடிக் கொடுக்கும் என்று நம்புகிறார்.

முதலும் முடிவும் ஆல்பம்  ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட்டது .இது மிக முக்கிய  சமூக ஊடக இணைய மேடைகளிலும்  வெளியாகும்.

Listen to our Independent Indie Single #MudhalumMudivum on YouTube with your loved ones!

SONG LINK ➡

Leave A Reply

Your email address will not be published.