கே.வி. ஆனந்த் மறைவுக்கு ரஜினிகாந்த், வைரமுத்து-திரையுலகினர் இரங்கல்..

2

பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவா ளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல்:
மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய அழ்ந்த அனுதாபங்கள். அவருடை ஆன்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் தனது இரங்கலை பகிர்ந்திருக்கிறார்.
அதில் கூறியதாவது:
வருந்துகிறேன் நண்பா!
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை
ராஜகவிதையாய் வடித்தெடுத்தாய்
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்

இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
ஒளியாக வாழ்வாய்
இனி நீ.
இவ்வாறு வைரமுத்து குறிபிட்டுள்ளார்.

ஜென்டில்மேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த கே.டி. குஞ்சுமோன் வெளியிட்டுள்ள இரங்கல்:
இன்றைய காலை பொழுது என்னை நடுங்க வைத்தது. ஒளிப்பதிவாளரும் இயக்குன ருமான கே.வி. ஆனந்த் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி என்னால் நம்ப முடியவில்லை.
என்னுடைய ‘ காதல் தேசம் ‘ படம் தான் அவருக்கு ஒளிப் பதிவாளராக தமிழில் அறிமுக படம். துடிப்பான, தொழில் பக்தியுள்ள அந்த இளைஞர் பிற்காலத்தில் பெரிய அளவில் இந்திய சினிமாவில் புகழ் பெறுவார் என்று அன்றே நான் கணித்து சொன்னேன்.

 

நீங்கள் இவ்வளவு வேகமாக விடை பெற்றிருக்க கூடாது. மிகவும் வருத்தமளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்… ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் இவ்வாறு கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இரங்கலில், ’காலை எழும்போது மிகவும் அதிர்ச்சியான தகவலாக கே.வி.ஆனந்த் மறைவு. நம்பமுடியவில்லை. அவரது குடும்பத்துக்கும் நண்பர்களுக் கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்; எனக் கூறி உள்ளார்.
தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறும்போது,’கே.வி.ஆனந்த் மரண செய்திகேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கோ படத்தில் அவர் பணியாற்றியது மறக்கமுடியாத நாட்கள். ஒரு படைப்பாளி இவ்வளவு சீக்கிரம் சென்றுவிட்டார். உங்களை ரொம்பவே மி ஸ் செய்கிறேன்’ என தெரித்திருக் கிறார்.

Leave A Reply

Your email address will not be published.