நடிகை ஷோபா நினைவு நாளின்று

0

கோலிவுட்டில் மறக்க முடியாத நடிகை ஷோபா. ஏணிப்படிகள், முள்ளும் மலரும் போன்ற பல படங்களி நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை ஷோபா.

1966ம் ஆண்டு சந்திரபாபு மற்றும் சாவித்ரி நடிப்பில் உருவான ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபா. பின்னர், நாயகியாக, ‘அச்சாணி’, ‘நிழல் நிஜமாகிறது’, ‘ஒரு வீடு ஒரு உலகம்’ படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகமே வியந்து பார்த்த ஷோபா தனது இளம்வயதிலியே தற்கொலை செய்து கொண்டார்.

இத்தனைக்கும் பூசின உடம்பு இல்லை. கவர்ச்சிக் காட்டியெல்லாம் நடிக்கவில்லை. மெலிந்த உடம்புதான். நடித்த படங்கள் கூட 25ஐத் தாண்டவில்லை. தலைமுறைகளும் கடந்துவிட்டன. ஆனாலும் அவரை மறக்கவில்லை ரசிகர்கள். மறக்கவே முடியாத நடிகை அவர். அதற்குக் காரணம்… அந்த முகம். நம் தெருவில் உள்ள பெண்ணைப் போன்றதொரு முகம். அந்தச் சிரிப்பு. எந்தக் கல்மிஷமோ விகல்பமோ பொய்யோ இல்லாத வெள்ளந்தியானச் சிரிப்பு. நம் வீட்டுப் பெண்ணைப் போன்றதொரு சிரிப்பு. குழந்தைத்தனமான சிரிப்பு. அந்தக் குழந்தைமைதான் குழந்தைமையும் கொஞ்சம் மேதைமைத்தனமும்தான் நம்மை ஈர்த்துப் போட்டது. இன்னமும் அவரை… இந்த நிமிடம் கூட, தமிழ் சினிமாவின் ரசிகர்கள் யாரேனும் எங்கேனும் இருந்துகொண்டு, அவர் பெயரைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அந்தப் பெயர்… ஷோபா.

Leave A Reply

Your email address will not be published.