டொரோன்டோ தமிழ்‌ இருக்கை குழுவினருக்கு கமல் வாழ்த்து

0

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டொரோன்டோ தமிழ் இருக்கை குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தி ருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
கனடாவில்‌ லட்சக்கணக்கான தமிழர்கள்‌ இருக்கிறார்கள்‌. டொரான்டோ பல்கலைக் கழகத்தில்‌ தமிழ்‌ மொழிக்கு ஓர்‌ இருக்கை அமைக்க வேண்டும்‌ என்று கனடாவில்‌ வாழும்‌ தமிழர்கள்‌ ஒன்றுகூடி நிதி திரட்ட ஆரம்பித்தார்கள்‌.

தமிழ்‌ இருக்கை அமைப்பதற் காக 3 மில்லியன்‌ டாலர்‌ நிதி
வெற்றிகரமாகத்‌ திரட்டப் பட்டுள்ளது. உலகம்‌ முழுக்க பரவி வாழும்‌ தமிழர்கள்‌
பலர்‌ இந்த பல்கலைக்கழகத் திற்கு நிதி அளித்துள்ளது ஒர்‌
உணர்வுப்பூர்வமான தமிழ்‌ எழுச்சியின்‌ அடையாளம்‌.

உலக நாடுகளில்‌ எங்கெல் லாம்‌ தமிழர்கள்‌ வாழ்கிறார் களோ, அஙகிருந்தெல்லாம்‌ தமிழ்‌ இருக்கைக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த
முயற்‌சியையும்‌ அதற்குக்‌ கிடைத்த வெற்றியையும்‌ கனடா பாராளுமன்றம்‌
வெகுவாகப்‌ பாராட்டியுள்ளது.
டொரான்டோ பல்கலைக் கழகத்தில்‌ தமிழ்‌ மொழிக்கு இருக்கை அமைந்துள்ளது
என்பது ஒவ்வொரு தமிழர் களும்‌ மகிழ்ச்‌சி கொள்ள வேண்டிய தருணம்‌.
இந்த அரும்பெரும்‌ முயற்சி யை சாத்தியமாக்‌கிய ஒவ்வொருவருக்கும்‌ என்‌
மனப்பூர்வமான வாழ்த்துக் களும்‌ பாராட்டுக்களும்‌.
நாளை நமதே!
உங்கள்‌ நான்‌,
இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.