முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு தங்கர்பச்சான் வாழ்த்து..

0

இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை:

தமிழக முதல்வராக தேர்வாகும்  ஸ்டாலின் அவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

ஸ்டாலின் அவர்கள் கடந்து வந்த போராட்டக் களங்களைக்காட்டிலும் முதல்வராக ஆட்சி செய்யப்போகும் இனிவரும் காலங்கள் தான் மிகுந்த சவால்கள் நிறைந்தது. வெறும் கை கால்களைக் கொண்டு ஒரு பெரும் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத் தலைவனின் நிலைதான் அவரது நிலை.

மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றும் பயிற்சியும் ஆளுமையும் அவருக்கு இருக்கின்றன. ஆளும் கட்சி எதைச்செய்தாலும் அதை எதிர்க்காமல் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பணியாற்றுங்கள். இதைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு இயக்குனர் தங்கர் பச்சான் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.