முதல்வரிடம் நடிகர் விஷால் கோரிக்கை

0

தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் அவர்களை நடிகர் விஷால் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் .அதன் பின்னர் அவர் கூறியதாவது…

முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையும் எடுத்து கூறினேன். இதனால் எத்தனை கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல் , மருந்து வாங்க கூட முடியாமல் கஷ்டபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கினேன். இன்றைய சூழலில் கொரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு , கண்டிப்பாக அதற்கான ஆவணத்தை செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்.அத்துடன் கவனமாக இருக்கவும் என்னை அறிவுறுத்தினார். அத்தோடு முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்று MLA ஆன உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக் கூறினேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.