புதிய தமிழக அரசில் இறையன்பு… இயக்குனர் வி.செ.குகநாதன்

0

திரைப்பட இயக்குனர் வி.செ.குகநாதன் கூறியதாவது:
‘சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது…
தியாகங்கள் செய்யாமல் பகை வெல்ல முடியாது’ என்ற தமிழ் அறிஞரின் வார்த்தைகளை ஐம்பது ஆண்டு அரசியல் வாழ்வின் மூலம் நிரூபித்து,
களவெற்றி பெற்ற இன்றைய முதல்வர், தன் முதல் நாள் பணிகள் மூலம் தன்னுடைய பயணம் எப்படி இருக்கப்போகிறது என்பதனை அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறார்.

பழனிவேல் தியாகராஜன் படிப்புக்கு ஏற்ற பதவியை வழங்கியது…
ஆற்றல் மிக்க இறையன்புவை மாநில முதன்மை செயலாளர் ஆக்கியது…
முதலில் கையெழுத்திட்ட ஐந்து பிரதான திட்டங்கள்…
மூத்த அரசியல்வாதிகளை நேரிலே சந்தித்து வாழ்த்து பெற்றது…
ஓய்வறியாது உழைத்து, கழகத்தை உருவாக்கிக் காத்தவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தியது…
கவர்னர் மாளிகையில் எதிர்க்கட்சிக் காரருடன் ஒரே மேடையில் அமர்ந்து சிற்றுண்டி அருந்தியது…
எல்லாவற்றிற்கும் மேலாக, ‘பொய்யுரையோ புகழுரையோ எனக்கு வேண்டாம்’ என கலெக்டர்கள் மீட்டிங்கில் பிரகடனப்படுத்தியது…

இதையெல்லாம் புரிந்துகொண்டு மக்கள் முதலில் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்கவேண்டும்.
மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் அரசியல் பேதங்களை மறந்து இணைந்து பயணிக்கவேண்டும்.
ஊடகங்கள், பட்டிமன்றங்கள், பத்திரிகையாளர்கள் தேவையற்ற விவாதங்களை உருவாக்காமல், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக உருப்படியான, உண்மையான விஷயங்களைப் பேசுதல் வேண்டும்.

இந்த நேரத்தில்
உயிர்கள் முக்கியம்.
வாழ்வு முக்கியம்.
உணவு முக்கியம்.
உயிர்மூச்சு அவசியம்.
சுகாதாரம் முக்கியம்.
வறுமைப்பிடியில் சிக்கியுள்ள பெரும்பான்மையான மக்களைக் காப்பது எல்லாவற்றை விட முக்கியம்.

இதையெல்லாம் அரசு செய்ய வேண்டுமானால், அனைத்து மக்களின் ஒற்றுமை முக்கியம்.
சுயநலம் என்பதனை அனைவரும் மறந்து கைகோர்க்க வேண்டும்.

வரலாற்று சிறப்பு மிக்க நம் தமிழினம் உலகுக்கு தற்போது வழிகாட்டுகிறது என்ற புதிய சரித்திரத்தை நாம் படைத்திடல் வேண்டும்.

இவ்வாறு வி.செ.குகநாதன் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.