முதல்வர் மு. க. ஸ்டாலின், எடப்பாடிக்கு டி.ராஜேந்தர் வாழ்த்து

9

இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் தலைவரும், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும்,தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ ஆலோசகருமான டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள வாழ்த்து :

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அதே நேரத்தில் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப் பேற்றிருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்று சட்டமன்றத்தில் வெற்றி பெற்று ஜனநாயக பணியாற்ற இருக்கும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.