ஹீரோவாக அறிமுகமாகிறார் ராணாவின் தம்பி

1

தெலுங்கு இயக்குனர் சுரேஷ்பாபுவின் மகன்களில் ஒருவரான ராணா டகுபதி, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததை தொடர்ந்து, தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக ஒரு இடத்தை பிடித்து நின்றுவிட்டார். இதையடுத்து அவரது தம்பி அபிராம் டகுபதியும் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை அவரே கூறி இருக்கிறார்.

தான் அறிமுகமாகும் படம் பற்றி அபிராம் கூறும்போது, “என் தாத்தாவின் ஆசை என்னையும் நடிகனாக்கி பார்க்கவேண்டும் என்பது.. அவர் இருந்திருந்தால் அது முன்கூட்டியே நடந்திருக்கும். தற்போது எனது தந்தையின் ஆதரவுடன் ஹீரோவாக அறிமுகமாகிறேன். ஏற்கனவே ‘நானே ராஜா நானே மந்திரி’ பட தயாரிப்பில் இயக்குனர் தேஜாவுடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன். அவர் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றுள்ளனர். மேலும் அவர் சொன்ன கதை என் மாமா வெங்கடேஷ், சகோதரர் ராணா உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே பிடித்துவிட்டது. தற்போதிருக்கும் நிலைமை சீரானதும் பட வேலைகள் தொடங்கும்” என கூறியுள்ளார் அபிராம் டகுபதி.

Leave A Reply

Your email address will not be published.