காஜல் அகர்வாலின் அடுத்த வெப் சீரிஸ்

1

சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகைகள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் சமந்தா, பிரியாமணி, ஹன்சிகா, தமன்னா என பல நடிகைகளும் இதில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்தியன்-2, ஹாய் சினாமிகா, ஆச்சார்யா என பல படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வாலும் தற்போது தெலுங்கில் மாருதி இயக்கும் ரிதிரோஸஸ் என்ற வெப் தொடரில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அல்லு அர்ஜூனின் ஆஹா ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகிறது. ஏற்கனவே இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‛லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.