சிம்பு, ஹன்சிகா நடிக்கும் மஹா படத்துக்கு தடையா?

பட நிறுவனம் விளக்கம்

1

நடிகர் சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள மஹா படம் வெளியாவதற்கு கோர்ட் தடை விதித்துள்ளதா என்பதற்கு பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அது வருமாறு:

நடிகர்‌ சிம்பு, நடிகை ஹன்ஷிகா மோத்வானி மற்றும்‌ முன்னணி நட்சத்தி ரங்கள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப குழுவினர்‌ பங்கேற்பில்‌ உருவாகியுள்ள்‌ “மஹா” திரைபபடத்தின்‌ வெளியீடு குறித்து சில தவறான தகவல்கள்‌, மக்களிடத்திலும்‌, ஊடகங்களிடையேயும்‌, உலா வருவது எங்களை வந்தடைந் தது. இணைய வெளியிலும். ஊடகங்களிலும்‌ “மஹா”
திரைப்படம்‌ முழுமையாக முடிக்கப்படவில்லையென்றும், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்‌ பேரில்‌ தடை செய்யப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும்‌
செய்திகள்‌ வெளியாகியுள்ளது. எங்களது etcetra entertainment நிறுவனத்தின் சார்பில்
நிறுவனத்தின்‌ சார்பில்‌ இதுகுறித்தான உண்மை தகவல்களை வெளியிட கடமைப்பட்டுள்ளோம்‌. “மஹா. படத்தின்‌
உண்மையான தகவல்கள்‌ பின்வருமாறு

1. “மஹா’ திரைப்படத்தின்‌ அனைத்து பணிகளும்‌
முழுவதுமாக முடிக்கப்பட்டு விட்டது. படம்‌ வெளியீட் டிற்கு, முழுமையான நிலை யில்‌ தயாராக உள்ளது.


2. இயக்குநர்‌ தரப்பில்‌ தயாரிப்பு தரப்பு மீது சில குற்றங்கள்‌ முன்வைக்கப் பட்டது. இந்நிலையில்‌ இயக்குநர்‌ தரப்பின்‌ சார்பில்‌, தயாரிப்பு தரப்பு மீது, சென்னை உயர்நீதி மன்றத்தில்‌
வழக்கு தாக்கல்‌ செய்யப்பட்டு 13/05/2021 சாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வகையில்‌ “மஹா” படத்தின்‌
மீது உயர்நீதி மன்றம்‌ எந்த வொரு தடையையும்‌ இதுவரை பிறப்பிக்கவில்லை. உயர்நீதி மன்றம்‌ சார்பில்‌ வழக்கு குறித்து இயக்குநர்‌ தரப்பு வழக்கறிஞர்‌ வாயிலாக சட்டபூர்வ அறிவிப்பு
கடிதம்‌ பெறப்பட்டது. அதில்‌ வழக்கின்‌ முறையான அடுத்த
விசாரணை 19/05/2021 அன்று நடைபெறுமென்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

3. இவ்வழக்‌கின்‌ பொருட்டு எங்கள்‌ தரப்பில்‌, உடனடியாக
வழக்கறிஞர் சுப்பிரமணியன்‌ வாயிலாக பதில்‌
பிராமண பத்திரம்‌ 18/05/2021 அன்று தாக்கல்‌ செய்யப் பட்டது.
அவ்வழக்கு விசாரணை . 1905/2021 அன்று
எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில்‌ “மஹா: படத்தின்‌ மீது சென்னை உயர்நீதி மன்றம்‌, எந்தவொரு தடையை யும்‌ இதுவரை பிறப்பிக்கவே யில்லை. இவ்வழக்கு விசாரணையை உயர்‌நீதி மன்றம்‌, ஜூன்‌ மாதம்‌ முதல்‌ வாரத்திற்கு ஒத்தி
வைத்துள்ளது. மேற்கூறப் பட்ட தகவல்களின்‌ அடிப்படையில்‌ இன்றுவரை “மஹா: படத்தின்‌ மீது சென்னை உயர்நீதி மன்றம்‌ எந்தவொரு தடையையும்‌ இதுவரை பிறப்பிக்கவில்லை என்பதே உறுதியான தகவலாகும்‌.

4. இயக்குநர்‌ தரப்பிலிருந்து தயாரிப்பாளர்‌ மீது வழக்கு
தொடரப்பட்ட நிலையில்‌, எங்கள்‌ தரப்பில்‌, வழக்கு விசாரணையை எதிர்கொண்டு, மாண்புமிகு சென்னை
உயர்நீதி மன்றத்தின்‌ உறுதி யான முடிவிற்காக காத்திருக்க
முடிவு செய்யபட்டுள்ளது. மேலும் தற்போதைய பொது முடக்க காலத்தில்‌ பல தடைகள்‌ விதிக்கப்பட்டுள் ளதை, கருத்தில்‌ கொண்டு, “மஹா” படத்தின்‌ வெளி யீட்டு தேதியை சரியான
நேரத்தில்‌ வெளியிட முடிவு செய்துள்ளோம்‌.
இதன்‌ பொருட்டு நடிகர்‌ சம்பு, நடிகை ஹன்ஷிகா மோத் வானி ஆகியோரின்‌ தீவிர ரசிகர்கள்‌ தற்பாதைய நிலையை புரிந்துகொண்டு, “மஹா: படத்தின்‌ பிரமாண்ட வெளியீட்டை திட்டமிட இன்னும்‌ சிறிது காலம்‌ அவகாசம்‌ அளிக்குமாறு
அன்புடன்‌ கேட்டுக் கொள்கிறோம்‌.
அனைவரும்‌ உடல்‌ நலத்தை பேணி, பாதுகாப்புடன்‌ இருங்கள்‌.
பொது வெளியில்‌ கண்டிப்பாக மாஸ்க்‌ அணியுங்கள்‌,
கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுங்கள்‌. பொதுமனித இடைவெளியை அனைவரும்‌ கடைபிடியுங்கள்‌.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.