ஜேம்ஸ் பாண்ட் – ரோஜர் மூர் காலமான தினம் இன்று..

2

பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் – என்று நம்ம்மிடம் சொல்லியே புகழ்ப்பெற்ற ரோஜர் மூர் காலமான தினமின்று.

ஹாலிவுட் படங்களில் பல சாகசங்களைச் செய்யும் துப்புறியும் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி வெளியான ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ திரைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. புகழ்ப்பெற்ற அந்த கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் ரோஜர் மூர் உடல்நிலக்குறைவால் இன்று காலமானார். ‘லிவ் ஆண்ட் லெட் டை’ மற்றும் ‘தி ஸ்பை ஹூ லவ்டு மீ’ உள்ளிட்ட ஏழு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் பிரபல ரகசிய உளவாளி கதாபத்திரத்தில் ரோஜர் மூர் நடித்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தின் ஒவ்வொரு பாகங்களிலும் புதிது புதிதாக நாயகர்கள் தோன்றி, ரசிகர்கள் மனதில் இடம்பெறுவர். அவற்றில் ‘ரோஜர் மூர்’ மிக முக்கியமானவர்.கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர், இன்று உயிரிந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் சமூகவலைதளங்களின் மூலம் அறிவித்தனர்!

ரோஜர் மோரின் வாழ்க்கை குறிப்பு:

• லண்டனில் பிறந்தவர். அப்பா போல போலீஸாக வேண்டும் என்பது லட்சியம். ஆனால், ஓவியராகி, பின்னர் திரைப்பட அனிமேஷன் துறைக்கு வந்தார். அதிலும் நிலைக்கவில்லை.

• பிறகு, புகைப்படக் கலைஞரான நண்பரின் உதவியால் மாடலிங் செய்தார். ஆனாலும், பெரிதாக சாதிக்கமுடியவில்லை. ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள்.

• மாடலிங் செய்தபோது ஹாலிவுட்டில் நடிக்க ஆசை துளிர்த்தது. ராயல் அகாடமி ஆஃப் டிரமாடிக் ஆர்ட் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். முதலில் தெரு நாடகங்கள், டிவி தொடர்களில் வாய்ப்பு வந்தது.

• 1945-ல் ஹாலிவுட்டில் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 5 ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் வெறுத்துப்போனவர் மீண்டும் டிவி சீரியலுக்கு சென்றார். ‘டிராயிங் ரூம் டிடெக்டிவ்’, ‘தி செயின்ட்’ ஆகிய டிவி தொடர்கள் இவரை உளவாளியாக பிரபலமாக்கின.

• ஒருவழியாக 46 வயதில் கதாநாயகன் ஆனார். 1973-ல் வெளிவந்த ‘லிவ் அண்ட் லெட் டை’ திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட் அவதரித்தார்.

• 1985 வரை ‘ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி’, ‘ஏ வியூ டு எ கில்’ உட்பட ஏழு படங்களில் 12 ஆண்டுகள் ஜேம்ஸ்பாண்ட் எடுத்த ஆக்ஷன் அவதாரங்கள் உலகை திரும்பிப் பார்க்கச் செய்தன. அதிக ஆண்டு காலம் 007 ஆக கோலோச்சிய ஒரே நட்சத்திரம் ரோஜர்.

• படப்பிடிப்பில் துப்பாக்கியும் கையுமாக திரிபவருக்கு உண்மையில் துப்பாக்கி, வெடிபொருட்களைக் கண்டால் பயம். ஆமாம், அவருக்கு ஹோலோஃபோபியா நோய் இருந்தது.

• ஜூனியர் ஜேம்ஸ்பாண்ட் டேனியல் கிரெய்க் நடித்த படத்தில் வில்லனாக நடிப்பது இவரது தீராத ஆசை.

• டிவி நிகழ்ச்சிகள், புத்தகம் எழுதுவது என்று 86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இந்த முன்னாள் 007, தான் நடித்தது உட்பட எந்த ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தையும் முழுமையாக பார்த்ததில்லையாம்!

Leave A Reply

Your email address will not be published.