பூம்பூம் மாட்டுக்காரருக்கு வாய்ப்பளித்த ஜி.வி.பிரகாஷ்

0

பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வீடுகள் முன்னால் நின்று நாதஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அவர் நாதஸ்வரம் வாசித்தது தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக பலரும் பதிவுகள் வெளியிட்டனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாசும் அந்த வீடியோவை பார்த்தார். உடனடியாக டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் திறமையானவர். துல்லியமாக நாதஸ்வரம் வாசிக்கிறார். இவரை தேடி கண்டுபிடித்தால் எனது பாடல் பதிவுக்கு பயன்படுத்திக்கொள்வேன்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவரது பெயர் நாராயணன் என்றும், ஆந்திராவை சேர்ந்தவர் என்றும், இதுதான் அவரது தொலைபேசி எண் என்றும் ஜி.வி.பிரகாசுக்கு தகவல் அனுப்பி வைத்தனர். உடனடியாக நாராயணனை தொடர்பு கொண்ட ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்து நெகிழ வைத்துள்ளார். ஏழ்மை நிலையில் இருக்கும் பூம்பூம் மாட்டுக்காரருக்கு வாய்ப்பு கொடுத்த ஜி.வி.பிரகாசுக்கு வலைத்தளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.