முதல்வரிடம் ரூ 1கோடியே 1 லட்சம் கொரோனா தடுப்பு நிதி வழங்கிய ஐசரி கணேஷ்

வேல்ஸ் கல்வி நிறுவன தலைவர் மற்றும் வேந்தர்

7

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தடுப்பு பணிகளை முதல்வர் மு. க  ஸ்டாலின் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்த பணிக்காக நிதி அளிக்கும்படி முதல்வர் வேண்டுகோள் விடுத்தி ருந்தார்.  அதன்பேரில் திரையுலகினர் தொழில் அதிபர்கள் நிதி வழங்கி வருகின்றனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை  இன்று தலைமைச் செயலகத்தில், வேல்ஸ் கல்வி நிறுவனங் களின் தலைவர் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தனது மனைவி ஆர்த்தி கணேஷ் மற்றும் மகள் செல்வி. பிரீத்தா கணேஷ் ஆகியோர் உடன் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை யை வழங்கினார்.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.