இயக்குனர் மனிரத்னம் பிறந்தநாள் : திரையுலகினர் வாழ்த்து

0

தமிழில் புதுமை இயக்குனர் என்ற பெயரை இன்று வரை தக்க வைத்துக்கொண்டிருப்பவர். மணிரத்தினம். உலக தரத்துக்கு படங்களை அளித்து வெளிநாடு களிலும் தமிழ் படங்களின் தரத்தை உயர்த்திகாட்டி பேசவைத்தவர்.

குடும்பம்,  காதல்,  அண்டர்வேல்டுக்கு தாதா கதைகள் என மாறுபட்ட படைப்புக்களின் மூலம் முத்திரை பதித்து தனக்கென ஒரு தனித்தன்மையை உருவாக்கிவைத்திருக்கிறார்.

மணிரத்னத்தின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து கூறி பிரபலங்கள்,  ரசிகர்கள் என ஏராளமானவர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை அள்ளிக்குவித்தனர்.

அடுத்து தனது கனவுபடமாக பொன்னியின் செல்வன் சரித்திரப்படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக இப்படம் வெளிவர உள்ளது. ஐஸ்வர்யாராய். திரிஷா விக்ரம்,  கார்த்தி,  ஜெயம் ரவி சரத்குமார் என பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடிக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.