திரில்லர் காதல் படமாக உருவாகும் தராதிபன்

1

சக்தி ஃபிலிம் பேக்டரி பிரபல டிஸ்டிபியூட்டர் சக்தி வேலனின் ஆர் எஸ் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள தராதிபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்

ஆர் எஸ் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அபி சரவணன் வழங்கும் தராதிபன் படம் ஒரு திரில்லர் காதல் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிரபல டிஸ்டிபியூட்டர் சக்திவேலன்  வெளியிடப்பட்டார். ஏற்கனவே யாமா படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர் மேலும் டெல்லியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது. இந்த முக்கிய அறிவிப்பை மக்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி என அப்படத்தின் இயக்குனர் சையத் அவர்கள் தெரிவித்துள்ளார்

இதில் கதாநாயகனாக அபிசரவணன் நடிக்க, கதாநாயகியாக பிரியங்கா நடிக்கிறார்.

இப்படத்தை  சையத் இயக்குகிறார். ஒளிப்பதிவு எஸ். சக்திவேல். இசை எல். வி முத்து கணேஷ். படத்தொகுப்பு  ஆனந்த் ஜெரால்டின். கலை சி. எஸ் செய்மதி. பாடல் வரிகள்- பிரியசுதன் , மதுரா. நடனம்  ஐ.ராதிகா, தாஷா. ஸ்டன்ட் ராக்கி ராஜேஷ். படங்கள்  சீனு. ஒப்பனை  ராவ். ஒலி  எ. எம் ரஹ்மதுல்லா. DI  ஷேட் 69 ஸ்டுடியோஸ்.
Sfx  சவுண்ட் ஹோலிக் சினிமா. Vfx..design  என். டாக்கீஸ். மீடியா பார்ட்னர் லைட்சன் மீடியா. இணை தயாரிப்பு சங்கர். தயாரிப்பாளர் அபிசரவணன்.
மக்கள் தொடர்பாளர்  பிரியா.

Leave A Reply

Your email address will not be published.