லாபம் (திரைப்பட விமர்சனம்)

1

நடிப்பு: விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், டேனி, ரமேஷ் திலக்,

இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: ராம்ஜி
தயாரிப்பு: விஜய்சேதுபதி
இயக்கம்:எஸ். எஸ். பி. ஜன நாதன்

7 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெருவயல் கிராமத்துக்கு வருகிறார் விஜய்சேதுபதி . விவசாயிகளின் பஞ்சமி நிலங்களை ஊர் பணக்காரர் ஜெகபதி பாபு அபகரித்து வைப்பதை அறிந்து  அதை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைத்து கூட்டு பண்ணை விவசாயம் ஆரம்பித்து வைக்கிறார்.. விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலையும் நிர்ணயிக்க செய்கிறார் விஜய்சேதுபதி. இதனால் கார்ப்பரேட் ஆளான ஜெகபதி கோபம் அடையும் ஜெகபதிபாபு, விஜய் சேதுபதியை தீர்த்துக்கட்ட முயல்கிறார். இறுதியில் நடப்பதை படம் விளக்குகிறது.

எப்போதுமே பொதுவுடமை பற்றி தனது படங்களில் அழுத்தமாக பேசும் இயக்குனர் ஜனநாதன் இதில் விவசாய பிரச்னைகள், கார்பரேட்களால் பாதிக்கப் படும் விவசாயிகள் பற்றி சாட்டை சுழற்றி இருக்கிறார். அதற்கான போராளியாக அவர் இப்படத்தில் விஜய்சேதுபதியை தேர்வு செய்திருக்கிறார்.
பஞ்சமி நிலங்களை மீட்க போராடும் விஜய்சேதுபதி போராளியாகவே மாறியிருக்கிறார். விவசாய சங்க தலைவராக அவர் தேர்வானபிறகு வேகம் அதிகரிக்கிறது. கார்ப்பரேட்கள் பெருமுதலாளிகளின் தொழிலாளர்கள் விரோத போக்கை எதிர்த்து வசனங்கள் பேசி அசரவைக்கிரார் விஜய் சேதுபதி.

 

ஹீரோயின் ஸ்ருதிஹாசன் விஜய்சேதுபதிக்கு துணையாக களத்தில் நிற்கிறார். விஜய்சேதுபதியின் நண்பர்கள் கலையரசன் டேனி போன்றவர்களின் நடிப்பும் கைகொடுக்கிறது.

ஜெகபதிபாபு. கார்ப்பரேட் எண்ணத்துடன் விவசாயிகளை பழிவாங்க எண்ணுவதும் அவர்களுக்காக போராடும் விஜய்சேதுபதியை பழிவாங்க துடிப்பதுமாக வில்லத்தனத்தை விளாசி தள்ளியிருக்கிறார்.
டி. இமான் இசையில் பாடல்கள் காதுக்கும் மனதுக்கும் இனிமை. ராம்ஜியின் ஒளிப்பதிவு தெளிவான பதிவுகள் மனதில் பதிகிறது
லாபம்- ஜனநாதானின் விவசாய போராட்டம்

Leave A Reply

Your email address will not be published.