3:33 (திரைப்பட விமர்சனம்)

21

படம்: 3:33

நடிப்பு: சாண்டி, கவுதம் வாசுதேவ் மேனன், புதுமுகம் ஸ்ருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி. சரவணன்

இசை: ஹர்ஷவர்தன்

ஒளிப்பதிவு: சதிஷ் மனோகரன்

தயாரிப்பு: ஜீவிதா கிஷோர்

இயக்கம்: நம்பிக்கை சந்துரு

சரியாக 3:33 மணிக்கு பிறந்த சாண்டியின் நேரம் சரியில்லை என்று பலரும் சொல்கின்றனர். அவரது வாழ்க்கையை நெகடிவ் எனர்ஜி அதிகம் ஆக்ரமித்திருக்கிறது. குறிப்பிட்ட நேரம் வந்தால் அவர் பேயிடம் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் அவதிப்படுகிறார்.  அவரது அம்மா, அக்கா, அக்கா மகளும் சிக்கலுக்குள்ளாகின்றனர். குறிப்பிட்ட நேரத்திலிருந்து வெளியில் வந்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க முடியும் என்று ஆவி ஜோதிடர் கூறுகிறார். அதற்காக கண்விழித்திருந்து குறிப்பிட்ட நேரத்திலிருந்து வெளியில் வர போராடுகிறார் சாண்டி. அந்த போராட்டத் தில் அவர் வெற்றி பெற்றாரா அல்லது பேய் தாக்குதலில் பலியானாரா என்பதற்கு கிளைமாக்ஸ் விளக்கம் தருகிறது.

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமான சாண்டி சினிமா நடன இயக்குனராக இருக்கிறார். இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி றார். நடனம் ஆடினோமா, காதலியை கட்டிபிடித்து டூயட் போட்டோ மா என்றில்லாமல் முழுக்க நடிப்புக்குள் தன்னை மையப்படுத் திக்கொண்டி ருக்கும் சாண்டியின் முதல் முயற்சி பாராட்டத் தக்கது.

அம்மா, அக்கா, அக்கா, குழந்தை ஒரு காதலி என்று சிறிய அளவிலான உறவு களுடன் வாழ்ந்தாலும் சாண்டியின் மனதில் நிம்மதி சிறிதும் இல்லாமல் தவிப்பதும், பேய் காட்டும் ஆட்டத்தை கண்டு பயந்து திணறுவதுமாக சாண்டி நடிப்பில் பயமுறுத்துகிறார்.

திடீரென்று அவரது அம்மாவும் அக்காவும் பேயாக மாறி துரத்துவதும் அவர்களிட மிருந்து தப்பித்து ஓட்டம் பிடிப்பதுமாக பரபரப்பை ஏற்படுத்தும் சாண்டி கிளைமாக்ஸில் தன்னை நெருங்கிவரும் அம்மா, அக்கா, குழந்தையை பேய் என்று எண்ணி கொல்வது சோகம்.
3:33 கெட்ட மணி நேரத்திலிருந்து எப்படி வெளியே வருவதுஎன்பதை யூ டியூபில் ஆன்மாவிடம் பேசும் ஜோசியர் கவுதம் மேனன் சொல்லும் வழிகளை பக்காவாக கேட்டு அதன்படி குறிப்பிட்ட நேரத்திலிருந்து விடுபட சாண்டி செய்யும் முயற்சிகள் கிளைமாக்ஸை விறுவிறுப்பாக் குகிறது.
ஹீரோயின் ஸ்ருதி, காதலியாகவும். சில சமயம் பேயாகவும் மாறி ஆச்சரியமூட்டுகிறார். ஆவி ஜோதிடராக வரும் கவுதம் மேனன், பேய் விரட்டும் பாதிரியாக வரும் மைம் கோபி சில நிமிடங்களே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கின்றனர்.

சதிஷ் மனோகரன் ஒளிப்பதிவு கைகொடுக்கிறது அதுபோல் ஹர்ஷவர்தனின் அதிரடி இசை திகிலை அதிகப்படுத்துகிறது.

3:33 திருப்பங்களுடன் கூடிய பேய் படம்.

Leave A Reply

Your email address will not be published.