நடிகை சரண்யா சசி. தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர். மலையாளத்தில் பல படங்களில் நடித்ததுடன் டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். கடந்த 10 வருடமாக இவர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்ததுடன் அறுவை சிகிச்சையும் செய்தார். இந்நிலையில் அவருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாசிட்டிவ் ஆக இருந்தது. சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார்.ஆனாலும் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்துவந்தது.
இந்நிலையில் நேற்று சரண்யா சசி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 35.அ அவரது மறைவுக்கு கேரளா முதல்வர் பினராய் விஜயன், நடிகர் மம்மூட்டி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.