அமிதாப்பை பின் தொடரும் 4.5 கோடி பேர்!

14

நடிகர் அமிதாப் பச்சனை, ‘டுவிட்டர்’ பக்கத்தில், 4.5 கோடி பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு வாழ்த்து சொல்லி ஜாஸ்மின் என்ற ரசிகை, அமிதாப்பின் பழைய போட்டோவை பகிர்ந்தார். அதை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, நன்றி தெரிவித்ததோடு, ‘இது வெறும் போட்டோ அல்ல; அதற்கு மேலான நினைவுகள் பொதிந்திருக்கிறது’ என அமிதாப் தெரிவித்துள்ளார்.

‘கூலி ‘ படத்தில் நடித்த போது, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கினார் அமிதாப். சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து திரும்பிய அவரை பார்த்து, அவரது தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அப்போது காலில் விழுந்து, அமிதாப் ஆசி பெற்ற போட்டோ தான் அது.

Leave A Reply

Your email address will not be published.