நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி, கே.பி.சுந்தரம்பாள், நாகேஷ், முத்துராமன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரஙகள் நடித்த காலத்தால் அழிக்க முடியாத அற்புத படம் திருவிளையாடல்.
இப்படம் ஜூலை 31ம் தேதி 1965ம் ஆண்டு திரைக்கு வந்தது. இன்றுடன் இப்படம் வந்து 56 ஆண்டுகள் நிறைவடைந் தாலும் மக்களால் மறக்க முடியாத காவியமாக நிலை பெற்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல.