மாஸ்டருக்கு தியேட்டரில் 6 காட்சி

14

விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு தியேட்டர்களில் 6 காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீசாகிறது. பொங்கலையொட்டி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே தியேட்டர்களில் அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு கூடுதல் காட்சிகள் திரையிட்டுக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி காலையில் இரண்டு காட்சிகள் கூடுதலாக திரையிட்டு ஜனவரி 13ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மொத்தம் 6 காட்சிகள் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.