7 வருட சினிமா வாழ்க்கை மகிழ்ச்சியை தந்தது – ரகுல் பிரீத் சிங்

18

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் சினிமாவுக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

7 வருடத்துக்கு முன்பு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது எனது முகத்தில் என்ன மாதிரி மகிழ்ச்சி இருந்ததோ அது இப்போது வரை மாறாமலேயே இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னை அன்பாக ஆதரித்த ரசிகர்கள்.

தமிழ், தெலுங்கு ரசிகர்கள்தான் எனக்கு அதிக ஆதரவு கொடுத்தனர். என்னை நேசித்தார்கள். அவர்கள் அன்பினால்தான் நான் இன்றும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். எங்கேயோ டெல்லியில் பிறந்தேன். ஆனாலும் எங்கள் வீட்டு பெண் மாதிரி தமிழ், தெலுங்கு திரையுலகம் என்னை அரவணைத்தது.

அதனாலேயே எனது சினிமா பயணம் அற்புதமாக அமைந்தது. இந்த பயணத்தில் என்னை நம்பிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இன்னும் நல்ல மனிஷியாக நடிகையாக மாற உங்கள் ஆதரவு, விமர்சனங்கள், அன்பு எல்லாம் உதவியாக இருக்கும்.

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.