“83” (திரைப்பட விமர்சனம்)

0

படம்: 83

நடிப்பு: ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஜீவா, பங்கஜ் திரிபாதி, தஹிர் ராஜ் பஹசின், ஜதின் சமா, சிராக் பட்டில், தின்கர் சர்மா, ஹார்டி சந்தனு, நிஷாந்த் தஹியா, சாஹில் கட்டார், அம்மி விர்க், ஆதிநாத் கோதரே, தஹாரியா கர்வா, ஆர் பத்ரி

இசை: ஜூலிய்ஸ் பேக்யம்

ஒளிப்பதிவு: அசீம் மிஷ்ரா

தயாரிப்பு: தீபிகா படுகோனே, கபிர்கான்

இயக்கம்: கபிர் கான்

 

கபில்தேவ் தலைமையிலான உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா உலகப் கோப்பை வென்ற அற்புத தருணத்தை 83 படமாக கபிர் கான் இயக்கி உள்ளார்.
உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பங்கேற்கும்போது இந்திய அணிக் கென்று எந்த நாட்டு அணி வீரர்களும். அதிகாரி களும் மதிப்பு தருவதில்லை. இந்திய வீரர் என்றதும் ஏளனமாக பார்ப்பது, கிண்டல் செய்வது என்ற போக்கு இருந்தது.
1983ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடந்த போட்டியில் உலக கோப்பையை வென்று இந்தியா மீது சொல்லப்பட்ட அவமானங்கள் எப்படி துடைத்தெறியப்பட்டது கதையாக 83 உருவாகி உள்ளது.
கபில்தேவ் வேடத்தை ரன்வீர் சிங் ஏற்றிருக் கிறார். முற்றிலுமாக தன்னை அந்த கதாபாத் திரத்துக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டி ருக்கும் ரன்வீர் தொடக்கத்திலேயே ரசிகர் களின் கவனத்தை தன் பக்கம் கவத்தை இழுத்துக்கொள்கிறார்.

இங்கிலாந்து போய் இங்கிலிஷ் பேச தெரியாமல் போட்டியில் எப்படி பங்கேற்கப் போகிறோமோ என்று ரன்வீர் காட்டும் தயக்கமும் பின்னர் அங்கு நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதே வேகத்தில் பதில் சொல்ல முடியாமல் தனது நிலைமை யை ஓப்பனாக வெளிப் படுத்திவிட்டு, ’இங்கு கோப்பை வெல்வதற்காக வந்திருக்கிறோம்” என்று ஒரே பதிலில் எல்லாவற்றுக்கும் விடை அளிப்பது ருசிகரம்.
கிரிக்கெட் மைதானத்தில் மேற்கிந்திய தீவு அணியுடன் இந்திய அணி மோதும் போட்டி தான் படத்தில் பேசப்படும்போட்டியாக அமைகிறது. மேற்கிந்திய தீவு அணியினர் வீரர் வீசும் புல்லட் வேக பந்து வீச்சில் இந்திய வீரர்கள் சிலர் அடிபட்டு திணறுவதும் ரத்த காயத்துடன் மருத்துவமனைக்கு செல்வதுமாக காட்சியே பரபரப்புக்குள்ளாகி விடுகிறது.
கடினமாக விளையாடி போட்டிகளை வெல்லும்போது அதை அதிர்ஷ்டத்தில் பெற்று வெற்றி என்று விட்டதாக அங்குள்ள பத்திரிகைகள் குறிப்பிட்டதை கண்டு சக வீரர்கள் கோபத்தில் பொங்கி எழுவதும் அவர்களை சமாதானப்படுத்தும் ரன்வீர், ’இந்த விமர்சனங்களுக்கு போட்டியில் வெற்றி பெற்றுத்தான் பதில் அளிக்கவேண்டுமென்று” அழுத்தமாக செய்வதும் காட்சியையே பலமாக்குகிறது.
இடைவேளைக்கு பிறகு வந்தாலும் ஆண்கள் கூட்டத்துக்கு மத்தியில் பூத்த ரோஜா மலராக தோன்றுகிறார் தீபிகா படுகோன். மனம் உடையும் ரன் வீருக்கு அவர் சொல்லும் ஆறுதல் தெம்பூட்டுகிறது.
ஜூலிய்ஸ் பேக்யம் அதிக பிரசங்கித்தனம் செய்யாமல் தேவையான இசையை வழங்கி இருக்கிறார். அசீம் மிஷ்ரா ஒளிப்பதிவும் 80 காலகட்டத்துக்குள் ரசிகர்களை கொண்டு சென்றிருக்கிறார்.
படம் முழுவதும் நிஜ சம்பவங்களை நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தி இயக்குனர் இருக்கிறார் கபிர் கான்.
83 – 80ஸ் கிட்ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸும் பார்க்க வேண்டிய படம்.
by-
க.ஜெயச்சந்திரன்

Leave A Reply

Your email address will not be published.