இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத தருணம் ”83” டிரெய்லர்

1

இந்தியா போன்ற எண்ணற்ற மதங்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய, பல தரப்பட்ட மக்கள் வாழும் தேசத்தில், ‘கிரிக்கெட்’ மற்றும் ‘திரைப்படங்கள்’ மட்டுமே அத்தகைய தடைகளை தாண்டி, மக்களை உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கும் களமாக இருந்து வருகிறது. இந்திய மக்கள் கொண்டாடும் கிரிக்கெட் விளையாட்டில், ஒரு அற்புத தருணம்
என்றால் 1983 இல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கோப்பையை வென்று மொத்த உலகத்தையும் ஆச்சரியப்படுத்திய அழகான தருணம் தான். இதனை மேஜிக் என்று எளிதில் சொல்ல முடியாது. ஏனெனில் அணியிலிருந்த ஒவ்வொரு விளையாட்டு வீரரையும், பல சவால்களை தாண்டி அவர்களை வெற்றி நோக்கி தள்ளியது,

வெற்றியை விட்டுக்கொடுக்க விரும்பாத எண்ணம் மற்றும் அவர்களுக்குள் இருந்த தேசத்திற்காக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற உணர்வு, அனைத்து முரண்பாடுகளையும் உடைத்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென்கிற முனைப்பான லட்சியம் தான். டிரெய்லரில் ஒரு குறிப்பிட்ட ஷாட்டில், பங்கஜ் திரிபாதி நடித்த கதாபாத்திரம், “சில பத்தாண்டுகளுக்கு முன்பு நமது நாடு சுதந்திரம் பெற்று விட்டது, ஆனால் நாம் நமக்கான மரியாதையை இன்னும் உலகத்திடமிருந்து பெறவில்லை” என்று கூறுகிறார். இத்தகைய வரிகள் அன்றைய காலத்தின் இந்திய மக்கள் மொத்த பேரின் உணர்ச்சியை வெளிப்படுத்தும்போது, கபில் தேவ் மற்றும் அவரது குழுவினர் கடுமையான மன அழுத்தம் மற்றும் வெற்றி பெற வேண்டிய பொறுப்புகளால் அழுத்தப்படும் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.

பாலிவுட் பிரபலம் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ள 83 திரைப்படத்தின் டிரெய்லர், பார்வையாளர்களுக்கு இதயம் நெகிழும் பல உணர்ச்சிகரமான தருணங்களை அளித்திருக்கிறது. இந்த டிரெய்லர் இன்றைய சமகால தலைமுறையினர், டிசம்பர் 24, 2021 (உலகளவில் திரையரங்கு வெளியீடு) அன்று ஒரு காலப்பயணத்தில் இந்திய வரலாற்றில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு தருணத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியளிக்கிறது.

83 திரைப்படத்துடன் கமல்ஹாசனின் தொடர்பு வெறும் வர்த்தக காரணிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை, அவருக்கும் இந்த படைப்பிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ‘கிரிக்கெட்’ மற்றும் ‘திரைப்படங்கள்’ ஆகியவை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் களங்கள் என்று முன்னர் கூறியது போல், நடிகர் கமல்ஹாசன், ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் சின்னமாக இருந்து வருகிறார். இலக்குகளை அடைவதில் அவரது தீராத விடாமுயற்சி, திரைத்துறையில் பல கடினமான முரண்பாடுகளையும் எதிர்த்து, அவர் புரிந்த சாதனைகள் இந்திய வரலாற்றின் பக்கங்களில் மறுக்கமுடியாத அந்தஸ்தை அவருக்கு வழங்கியுள்ளது. திரைப்படத்திற்கும் கமல்ஹாசனுக்கும் இடையே நிலவும் இத்தகைய வலுவான ஒற்றுமைகள், அவர் மூலம் ’83’ திரைப்படத்தை பார்க்க, தமிழ்நாட்டில் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைக்கும் ஒரு அருமையான காரணியாக இருக்கும்.

83 திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 83 திரைப்படம் 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை சம்பந்தப்பட்ட நிஜ வாழ்க்கை சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவ் பாத்திரத்திலும், ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாத்திரத்திலும் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தீபிகா படுகோனே, இப்படத்தில் கபில்தேவின் மனைவியாக நடிக்கிறார்.

கமல்ஹாசனின்  ராஜ்கமல் பிலிம்ஸ்  இனடர்நேஷ்னல் ( Raajkamal Films International) இணைந்து  ரிலையன்ஸ் எண்டட்ரெயின்மெண்ட்(Reliance Entertainment) இப்படத்தை வழங்குகிறார்கள். இப்படம் கபிர்கான் பிலிம் (Kabir Khan Films )தயாரிப்பாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தினை தீபிகா படுகோனே, கபீர் கான், விஷ்ணு இந்தூரி, சஜித் நடியாவாலா, பேந்தம் பிலிம்ஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்( (Phantom Films, Reliance Entertainment) மற்றும் 83 பிலிம் லிமிடெட்( 83 Film Ltd ) இணைந்து தயாரித்துள்ளனர். கபீர் கான் இயக்கியுள்ள இப்படத்தை, ஒய்நாட்எக்ஸ் அண்ட் ரிலையன்ஸ் எண்டட்டெயின்மெண்ட்( (YNOTX மற்றும் Reliance Entertainment) இணைந்து, கிறிஷ்துமஸ் வெளியீடாக 24 டிசம்பர் 2021 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் & கன்னடம் மொழிகளில் வெளியிடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.