83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

3

 

” என் ராசாவின் மனசிலே, ‘ அரண்மனை கிளி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய வெற்றிப்படங்கள் உட்பட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள 83 வயதுள்ள பி.வி.நம்பி ராஜன் கதையின் நாயகனாக நடிக்க ” அஸ்திவாரம்” என்ற படம் ஒன்று உருவாகிறது

ஜி..ஜி.ஆர். மூவி எண்டர் பிரைசஸ் சார்பில் தொழில் அதிபர் ஏ.இசட் . ரிஜ்வான் தயாரிக்கும் இந்த படத்தில் இளம் நாயகன் ஒருவரும் அறிமுகமாகிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க இருக்கிறார்கள்.

இயக்குனர் பாரதி கணேஷிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற உடுமலை எஸ்.அஜ்மீர் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படத்தைப் பற்றி அவர், ” தமிழ் திரை உலக வரலாற்றில் 83 வயது முதியவர் கதாநாயகனாக நடிப்பது இதுதான் முதல்முறை என்றால் அது மிகையாகாது. வயது குறைந்த நடிகர்கள் மேக்கப் போட்டு முதுமை தோற்றத்தில் நடித்த படங்கள் பல உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல். ரஜினி, விஜயகாந்த், வி.கே.ஆர், சத்யராஜ், பிரபு, சரத்குமார், என நிறைய நடிகர்கள் அப்படி நடித்த படங்கள் உள்ளது. ஒரிஜினலாக 83 வயதுடைய பி.வி.நம்பி ராஜன் நாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவில் நடக்கும் புதுமை. இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டு, முழுவதும் வேறுபட்டு இருக்கும் என்று நான் கூறமாட்டேன். இதைவிட மேலான வார்த்தைகளை படம் பார்த்தபின் பார்த்த வர்கள் கூறுவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த ” அஸ்திவாரம்” படத்தின் கதையை அமைத்துள் ளேன். நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது. திண்டுக்கல், பித்தளை பட்டி, ஆத்தூர், சின்னாள பட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய ஊர்களில் படம் வளர்ந்து வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் ” என்று கூறுகிறார்.

பி. ஆர். ஒ விஜயமுரளி
கிளாமர் சத்யா.

Leave A Reply

Your email address will not be published.