இயக்குனர் பாலாஜி தரணிதரனிடம் ஒரு மினி பேட்டி

13

அடுத்த படம்?

கதையை எழுதி முடித்துள்ளேன். இது, ஸ்டார் வேல்யூஷன்கான படம் இல்லை. புதுமுகங்கள் நடிக்க வாய்ப்புள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியை வீணடித்து விட்டதாக பேச்சு நிலவுவதால், மீண்டும் அந்த ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. அதே நேரம், விஜய் சேதுபதிக்காகவும் ஒரு படம் செய்ய வாய்ப்புள்ளது.

ஒரு பக்க கதை ஏன் தாமதம்?

படம், 2018ம் ஆண்டிலேயே சென்சார் முடிந்து விட்டது. ஆனால் வெளியீட்டு சிக்கலால், தற்போது ஆன்லைன் தளத்தில் வெளியாகியுள்ளது. காளிதாஸ், மேகா ஆகாஷ், இசையமைப்பாளர்கோவிந்த் வசந்தாவுக்கு, இது முதல் படம். அதனால், எனக்கு சந்தோசம்.

கதைக்கு ஏன் வறட்சி?

இங்கு கதைக்கு பஞ்சமே இல்லை. ஆனால் திரைக்கதையில் தான் சிக்கல். திரைக்கதை திருப்தியாக வரவில்லை என்றால், பிரமாண்ட கதையானாலும் வீணாகிவிடும். ஒவ்வவொரு கட்டத்திலும் கதை சொல்லும் விதம் மாறுகிறது. புதியவர்கள் நிறைய பேர் வருகின்றனர். கதை சொல்லுவதிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

தியேட்டர்களின் எதிர்காலம்?

தியேட்டர் அனுபவம், வீட்டில் கிடைக்காது. வீட்டை விட்டு வெளியே வர நினைப்பவர்களுக்கு, தியேட்டர் ஒரு சுற்றுலா தளம். கிராவிட்டி போன்ற படங்களை தியேட்டரில் தான் ரசிக்க முடியும்.

தமிழ் படத்துக்கு எப்போது ஆஸ்கர் விருது?

நம்ம ஆட்டம் வேறு, அவர்களின் ஆட்டம் வேறு. படம் துவக்கம் முதல் ரசிகர்களை கட்டிப்போட்டு வைப்பது, ஹாலிவுட் பாணி. யூரோப்பியன் படங்களில் முதலில் எதுவும் புரியாது: ஆனால் கடைசியில் நிறைவு இருக்கும். நம் படங்களில், பாடல்கள் தான் பிரதானம்.

சண்டை டூயட் கலந்த மசாலாவாக தான், நம் படங்கள் இருக்கும். நம் சாம்பார் சாதத்திற்கு, அவர்களின் விருது வேண்டும் என ஏன் ஆசைப்பட வேண்டும்.

நம் சாம்பார் சாதத்தை நம் மக்கள் ருசித்தால் போதுமே.

Leave A Reply

Your email address will not be published.