விஜய் சேதுபதி மகள் பற்றி அவதூறு வெளியிட்டவர் மன்னிப்பு கேட்ட வீடியோ..

15

இலங்கை கிரிக்கெட் அணி யின் வீரர் முத்தையா முரளி தரனின் வாழ்க்கை படமாக 800 என்ற பெயரில் ஒரு படம் அறிவிக்கப்பட்டது. இதில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கை படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி முத்தையா முரளிதரனே கேட்டுக்கொண் டார். அதை யேற்று அவருக்கு நன்றி வணக்கம் சொல்லி விஜய் சேதுபதி ’800’ படத்திலிருந்து விலகினார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி மகளை பற்றி மர்ம நபர் ஒருவர் அவதூறாக டிவிட் டரில் பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட் டது, அந்த நபரை கைது செய்ய வேண் டும் என்று போலீசில் புகார் தரப்பட்டது. இதையடுத்து அவரை போலீ சார் தேடினர். அந்த நபர் இலங்கையை சேர்ந்தவர் என்பது கண்டறிப்பட்டது.
தற்போதுகுறிபிட்ட நபர் வீடியோவில் முகத்தை முகமூடியால மறைத்தபடி மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டிருக் கிறார்.

 


அதில் அவர் கூறியதாவது: டிவிட்டரில் விஜய் சேதுபதி பற்றியும் அவரது மகள் பற்றியும் தப்பாக பேசிய இலங்கையை சேர்ந்த தமிழன் நான்தான். என்னை மன்னிச்சி டுங்க. இதுக்கு மன்னிப்பு கிடையாதுன்னு எனக்கு தெரியும். ஏனென்றால் ஒரு குழந்தையை பற்றி ரொம்ப தப்பா பேசிட்டேன். என் வாழ்நாளில் அப்படி பேசன தில்ல. யாரையும் திட்டினது கூட இல்லை. நான் ஏன் அப்படிபேசினேன் என்று கேட்டால், இந்த கொரோனா வால் எனக்கு வேலை போய் விட்டது. இலங்கையில் நடந்த யுத்தத்தை பற்றி தெரிஞ்சும் இவ்வளவு சர்ச்சையான படத்தில், தெரிஞ்சும் நடிக்கி றாரே என்ற எல்லா தமிழர் களிடமும் இருக்கிற கோபத் தால்தான் நான் டிவிட் போட் டேன். இனி அந்த மாதிரி டிவிடெல்லாம் வாழ்க்கையில் பண்ணவே மாட்டேன். அதுக்காக உலக வாழ் தமிழர் களிடமும், விஜய் சேதுபதி அண்ணா உங்ககிட்டயும் உங்கள் மகள், என்தங்கச்சி மாதிரி பாப்பா அவங்ககிட் டயும் அவங்க மனைவிகிட் டேயும் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கிறேன். உங்க தம்பியா நினைச்சி என்னை மன்னிச்சி விட்ருறங்க.. வாழ்க்கையில் இந்த மாதிரி தப்பை நான் பண்ணவே மாட்டேன். நான் செஞ்ச தப்புக்கு ஆண்டவன் தண்டனை கொடுத்தாலும் மிகப் பெரிய தண்டனையாத் தான் கிடைக் கும்.
விஜய்சேதுபதி, அவங்க மனைவி, மகள் மற்றும் தமிழக மக்கள் மட்டுமல்ல உலக தமிழ் மக்களிடமும் நான் தாழ்மையுடன் மன்னிப்பு கேடுக்கொள்கிறேன். எனக் காக இல்லாவிட்டாலும் என்னை நம்பி ஒரு குடும்பமே இருக்கு.. என் தாய்க்காகவும் என் தம்பி, அப்பா சொந்தகார ர்கலெல்லாம் இருக்கிறார்கள் .வெளியில் பெயர், முகம் தெரிந்தால் என் வாழ்க்கையே வீணா போய்விடும் இந்த தப்பை என் வாழ்க்கையில் நான் பண்ணவே மாட்டேன். விஜயசேதுபதி அண்ணா நீங்கள், உங்கள் மகள் உங்க குடும்பம் எல்லாம் சேர்ந்து என்னை மன்னிச்சிடுங்க. தமிழ் நடிகர்கள் ஊடகவிய லாளர்கள் என்னை பற்றி அவதூறு பரப்புகிறார்கள். நான் அந்தமாதிரி கெட்ட எண்ணம் கொண்ட மனுஷன் இல்லை. ஏதோ மன நிலை பாதிக்கப்பட்டு வேலை கிடைக்காத ஒரு விரக்தியில் தான் இந்த மாதிரி தவறை பண்ணிட்டேன். என்னை உங்கள் உடன் பிறவா சகோதரனா நினைச்சி மன்னிச்சிடுங்க
இவ்வாறு வீடியோவில் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.