ஆனந்தம் விளையாடும் வீடு (திரைப்பட விமர்சனம்)

6

 

படம்: ஆனந்தம் விளையாடும் வீடு

நடிப்பு: கவுதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சவுந்தர் ராஜா, முனிஷ்ராஜ், சிங்கம் புலி, நமோ நாரயணன், சினேகன், ஜோ மல்லூரி, நக்கலைட் செல்ல, சூப்பர் குட் சுப்ரமணி, வி.ஐ. கதிரவன், மவுனிகா,மைனா சுசானே, பிரியங்கா, மதுமிதா, சுஜாதா, நக்கலைட் தனம், ஜானகி, வெண்பா,

சுபாதினி, சிந்துஜா

இசை: சிந்துகுமார்

ஒளிப்பதிவு: பொர்ரா பாலபரணி

தயாரிப்பு:ரங்கநாதன்

இயக்கம்: நந்தா பெரியசாமி

கூட்டுக் குடும்பத்தை மையாக கொண்டு உருவாகி இருக்கிறது ஆனந்தம் விளையாடும் வீடு.

அண்ணன் தம்பி குடும்பத்தினர் தனித்தனியாக வசிக்கும் நிலையில் பெரிய வீடு கட்டி அதில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுகிறார் மூத்த அண்ணன் சரவணன். அதற்கு தம்பிகள் சேரன், சினேகன் சம்மதித்து வீடு கட்டும் வேலையை தொடங்குகின்றனர். குறிப்பிட்ட நிலத்தை அபகரிக்க டேனியல் பாலாஜி திட்டம் போடு கிறார்.சரவணன் இளைய தம்பிகள் இருவருக்கு பண ஆசை காட்டி நிலத்தை தனக்கு விற்க ஏற்பாடு செய்யச் சொல்கிறார். இது சரவணன் குடும்பத்தில் மோதலை ஏற்படுத்துகிறது. அண்ணன். தம்பி மனைவிகளுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடி தடி நடக்கிறது. இந்த குடும்ப குழப்பத்திலிருந்து சரவணன், சேரனால் தங்கள் உறவுகளை காக்க முடிந்ததா? திட்டமிட்டபடி பெரிய வீடு கட்டி அவர்களால் ஒற்றுமையாக வாழ முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

பெரிய குடும்பம் என்பதால் நட்சத்திர கூட்டமும் ரொம்பவே பெரிது. சரவணன், சேரன், சவுந்தரராஜா, கவுதம் கார்த்திக், டேனியல் பாலாஜி என சிலருக்கு மட்டுமே காட்சிகளில் முக்கியத்துவம் தர முடிந்திருக் கிறது. இவர்கள்தான் முழுகதையையும் நகர்த்தி செல்கின்றனர்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் மூத்த அண்ணனாக வரும் சரவணன் தனது நடிப்பை மேலோட்டமாக இல்லாமல் உள்ளூர உணர்ந்து வெளியிட்டிருப்பதால் மற்றவர்களின் நடிப்பும் எடுபடுகிறது. அதேபோல் சேரன் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

தன் குடும்பத்தைவிட பெரிதாக அண்ணன் சரவணன் மீது சேரன் பாசம் காட்டுவதும் ஒரு கட்டத்தில் அந்த பாசத்தை வெளிக்காட்ட முடியாதபடி தன் குடும்பத் தில் தன் மனைவி நடத்தும் தற்கொலை நாடகத்தால் செய்வதறியாது நிலைகுலைந்து போவதுமாக நடிப்பில் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார் சேரன்.

கவுதம் கார்த்திக் ஹீரோ என்றாலும் குடும்ப உறவுகளிடம் அவரால் எந்த கோபத்தையும் வெளிப்படுத்த முடியாத நிலைக்கு கட்டப்பட்டு விடுகிறார். ஆனால் டேனியல் பாலாஜி தனது குடும்பத்தினரை பாதிக்கும் வகையில் நடத்தும் ஒவ்வொரு சதி வேலைகளையும் முறியடித்து மனதில் இடம் பிடிக்கிறார்.

திகில், மர்மம், பேய் கதை என வரிசையாக வந்துக்கொண்டிருக்கும் நிலையில் அத்தி பூத்தார்போல் குடும்ப கதையாக வந்திருக்கிறது இப்படம்.

இயக்குனர் நந்தா பெரியசாமி கூட்டு குடும்பத்தை உயிர் பெற செய்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.

சிந்துகுமார் இசை அமைத்திருக்கிறார்.

பொர்ரா பாலபரணி எல்லா நடசத்திரங்களையும் மிஸ் பண்ணாமல் பிரேமுக்குள் கொண்டு வந்திருப்பதே பெரிய வெற்றிதான்.

ஆனந்தம் விளையாடும் வீடு – உறவுகளின் பாசப் போராட்டம்.

Leave A Reply

Your email address will not be published.