S.A.S.புரொடக்ஷன் S.A.S.யோகராஜ் வழங்க “கண்மணி பாப்பா” திரைப் படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி.அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் பல கோடி மக்களை கவர்ந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் வித்தியாச மான கதாபாத்திரம் ஏற்று கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு கே ஜிரத்தீஷ், இசை ஸ்ரீ சாய்தேவ். கலை எஸ்.ஜே.ராம். சண்டை எஸ்.ஆர்.ஹரி முருகன் ஆகியோர் பணியாற்று கிறார்கள். இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தில் ஆரி அர்ஜுனனுடன் முன்னணி நடிகர், நடிகை கள் இணைய இருக்கிறார்கள். அவர் களை பற்றிய விவரங் களை விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.