ஆறாவது நிலம் (திரைப்பட விமர்சனம்)

5

படம்: ஆறாவது நிலம்
நடிப்பு: நவயுகா குகராஜாஹ, ஜீவேஸ்வரன் அன்பரசி, மன்மதன் பாஸ்கி
இசை: சிந்தகா ஜெயகொடி
ஒளிப்பதிவு: சிவா சாந்தகுமார்
தயாரிப்பு: ஐ பி சி தமிழ் புரடக்‌ஷன்
இயக்கம்: அனந்த ராமன்
30 ஆண்டுகள் தமிழீழத்துக்காக இலங்கையில் நடந்தபோரில் பல இன்னுயிர்கள் பலியாகின. போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்தும் அதன்பாதிப்பு மட்டும் இன்னும் அங்கு மாறாமலிருக்கிறது. எஞ்சியிருக்கும் தமிழ் குடும்பங்கள் தங்களது கிரமாத்தில் தண்ணீருக்கும் இருப்பிடத்துக்கும் வழியிலாமல் திண்டாடுகின்றனர். போரின் போது காணாமல் போன கணவனை தேடும் ஒரு பெண்ணின் போரட்டமாக ஆறவது நிலம் படமாகி இருக்கிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல் கணவனை தேடி அலையும் அபலைப் பெண் நவயுகா குகராஜாஹ குடும்பத்தில் நடக்கும் சோகங்கள் மட்டுமே இவ்வளவு என்றால் அங்குள்ள எல்லா தமிழ் குடும்பங்களும் எவ்வளவு பாடுபடும் என்பதை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
மனதில் உள்ள வலியை முகத்தில் சுமந்து கணவனைதேடும் நவயுகா தன் குழந்தை யையும் வயதான தாயையும் கவனித்துக் கொள்வதும்., ராணுவத்தினர் மணலில் புதைத்து வைத்துவிட்டு சென்ற கண்ணி வெடி களை அகற்றும் ஆபத் தான வேலையை சக சொந்தங்களுக்காக செய்வதுமாக நாட்களை கடத்துவது நெஞ்சை கனமாக்குகிறது.
கணவனை கண்டுபிடிக்க உதவுவதாக ஒரு பக்கம் சிலர் நவயுகாவிடம் பணம் பிடுங்கப் பார்ப்பதும் இன்னொருபுறம் அவரையே விலையாக கேட்பதும் என நயவஞ்சக கூட்டம் இன்னமும் அங்கிருந்து நகவில்லை என்பதையே உணர்த்துகிறது.
நவயுகாவின் மகளாக நடித்திருக்கும் ஜீவனேஸ்வரன் அன்பரசி ’அம்மா, அப்பா எப்ப வருவாரம்மா’ என்று கேட்டும் போதெல்லாம் ஏதோ ஒரு சோகம் இதயத்தை தாக்குகிறது. மன்மதன் பாஸ்கி கரடு முரடாக தோன்றினாலும் உள்ளத்தின் அளவில் இரக்கமானவர் என்பது ஆறுதல்.
ஐ பி சி தமிழ் புரடக்‌ஷன் படத்தை தயாரிக்க அனந்த ராமன் ஈழத்தின் போருக்கு பிந்தய ஆறாத வலியை ஆறாவது நிலமாக படைத்திருக்கிறார்.
சிந்தகா ஜெயகொடியின் இசை சோகத்தின் சுவடுகளை தவழ விட அதை அப்படியே காட்சிகளாக கேமிராவுக்குள் கொண்டு வந்திருக்கிறார் சிவா சாந்தகுமார்.
ஆறாவது நிலம்: ஆறாத ரணம்.

Leave A Reply

Your email address will not be published.