திருமண நாளில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஆரி அருஜுனன்..

1

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரி அர்ஜுனன், நதியா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. நதியாவே தனது காதலை முதலில் வெளிப்படுத்தி இருந்தார்.

படங்களிலோ அல்லது சோஷியல் மீடியாக்களில் யாரேனும் காதலை வெளிப்படுத்துவது போல காட்சியைப் பார்த்தால் நீங்கள் ஒரு முறையாவது எனக்கு இப்படி காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆரி அர்ஜுனனுக்கு அவரது மனைவி நதியா அன்பு வேண்டுகோள் வைத்தார்
அதனை நிறைவேற்றும் பொருட்டு இந்த ஆறாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரை வெளியில் அழைத்துச் செல்வது போல் கடற்கரைக்கு அழைத்துச் சென்று
தனது காதலுக்காக தன் பெற்றோரையும் தன் நாட்டையும் விட்டு வந்து அவருடன் துணையாக வாழும் அவரது மனைவிக்கு

என் வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்கியவள் நீதான் என்று கூறி மோதிரம் அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நதியா அங்கேயே ஆனந்த கண்ணீர் விட்டார்..

காதலுக்காக தன் சொந்த நாட்டையும் விட்டு பெற்றோர்களையும் உறவினர்களையும் விட்டு விட்டு எனக்காகவே வாழும் என் மனைவிக்கு அவரது ஆசையை நிறைவேற்ற இப்படி இன்ப அதிர்ச்சி கொடுத்தேன், அதற்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் ஈரோடு மகேஷ் , Dr.அகமது மற்றும் வெங்கி குடும்பத்தினருக்கும் நன்றி என கூறினார் ஆரி அர்ஜுனன்.

 

 

Leave A Reply

Your email address will not be published.