நடிகர், நடிகை, தயாரிப்பளர்களுக்கு கலைமாமணி விருது.. முதல்வர் வழங்கினார்..

12

பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் கலைஞர்களை தேர்வு செய்து தமிழக அரசு  கலைமாமணி விருது வழங்கி வருகிறது   2019, 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நேற்று அறிவிக்கப்பட்டது.


நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், ராமராஜன், பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப் பாளர்கள் டி இமான், தீனா, ஜாகுவார் தங்கம், லியாகத் அலிகான் உள்ளிட்ட 128 பேருக்கு கலைமாமணி விருதும், 6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதற்கான விழா எளிமையாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். கலைமாமணி விருதுடன் 5 சவரன் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் அளித் தார். ஏற்கனவே கலைமாமணி விருது பெற்று வறுமையில் உள்ள கலைஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் முதல்வர் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.