கே. ஏ. தங்கவேலு மறைந்த நாள் இன்று (செப் – 29)

3

 

“கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்ட வரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார்.
தங்கவேலுவின் சொந்த ஊர் காரைக்கால். 10 வயதிலேயே நாடகங் களில் நடிக்கத் தொடங்கி னார்.
யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கி, பல நாடகக் கம்பெனிகளில் நடித்த பின்பு என்.எஸ். கிருஷ்ணனின் நாடகக் குழுவில் நடித்தார். இவர் நடித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த “சதிலீலாவதி”. அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் “பணம்” என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். “சிங்காரி” என்ற படத்தில் டணால்… டணால்… என்று அடிக்கடி கூறி நடித்ததால் டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்டார்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த “அமரகவி”யில், கலைவாணருடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல படங்களில் நடித்தவர். “சக்ரவர்த்தி திருமகள்”, “உத்தமபுத்திரன்”, “குலேபகாவலி”, “அலிபாபாவும் 40 திருடர் களும்”, “கற்புக்கரசி”, “மங்கையர் திலகம்”, “அமரதீபம்”, “கல்யாண பரிசு”, “எங்கவீட்டு பிள்ளை” உள்பட 800 படங் களுக்கு அதிகமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக் கிறார்.

குறிப்பாக,”கல்யாணப்பரிசு” படத்தில் எதற்கெடுத் தாலும் பொய் சொல்லும் டூப் மாஸ்டராகத் தோன்றி ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார். தமிழ்ப்படங்களில் வந்த 10 சிறந்த நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந் தெடுத்தால், அதில் “கல்யாணப்பரிசு” தங்கவேலுவின் நகைச்சுவை நிச்சயம் இடம்பெறும்.

Leave A Reply

Your email address will not be published.