நடிகர் காளிதாஸ் காலமானார்

3

 

டிவி’ தொடர் மற்றும் திரைப்பட நடிகர், 6 அடி 2 அங்குல உயரமுள்ள, கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர், திரைப்படங்களில், பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் என்று, பல முகம் கொண்டவர் வி.காளிதாஸ். பின்னாளி, ஓட்டல் முதலாளியாக இன்னொரு அவதாரம் எடுத்து இருந்தவர் மரணம் அடைந்தார்.

திருச்சியில், அக்காலத்தில், தேவர் ஹால் விஸ்வம் என்றால், தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அனைவ ராலும் நன்கு அறியப்பட்ட நாடக நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான விஸ்வம் என்பவரின் மகன்தான் வி.காளிதாஸ்.

*சென்னை தொலைக் காட்சியில், செய்தி வாசிப்பாளராக இருந்த ஷோபனா ரவி மற்றும் நடிகை சொர்ணமால்யா ஆகியோர், இவரது உறவினர்கள். ஷோபனா ரவியின் கணவரான ரவி, காளிதாசின் மூத்த சகோதரர்.

“மாயா மாரீசன்’ என்ற, “டிவி’ தொடரில், மாயாவி யாக நடித்தவர். இதில் சிறப்பாக நடித்தற்காக, சிவாஜி கணேசனால் பாராட்டு பெற்றுள்ளார்.

“புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், பின்னணி குரல் கொடுக்க, முதன்முதலில் இயக்குனர் பாலசந்தர் இவரை அறிமுகப்படுத்தினார். அப்படத்தின் டைட்டிலிலும், இவரது பெயரை இடம்பெற செய்து கவுரவித்தார். இருபது ஆண்டுகளுக்கு முன், சென்னை தொலைக் காட்சியில் ஒளிப்பரப்பான, “மகாபாரதம்!’ இந்தி தொடரில், பீஷ்மராக நடித்த முகேஷ் கன்னா விற்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

ரஜினி நடித்த, “அண்ணாமலை மற்றும் வீரா’ போன்ற படங்களில், வில்லன் நடிகருக்கு பின்னணி குரல் கொடுத் துள்ளார்.

தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிய மர்ம தேசம் என்ற தொடருக்கு குரல் கொடுத்து, அந்த கதாபாத் திரத்தை அழகாக மெருகேற்றி காண்பித்தார் இவரது குரலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகி யதால், அந்த கதாபாத்திர மும் மக்கள் மத்தியில் நின்றதால் இவருக்கு தங்கச் சங்கலி பரிசளித்த ரசிகை கூட உண்டு .

காளிதாசின் மனைவி, ஆந்திர மகிளா சபாவில், சமூக சேவை செய்கிறார். ஒரே மகள், பிரபல திரைப்பட இயக்குனர் களிடம் பல படங்களில் உதவி இயக்குனராகவும், அசோசியேட் இயக்குன ராகவும் பணிபுரிகிறார்.

Leave A Reply

Your email address will not be published.