நடிகர் மன்சூர் அலிகான் வெளியிடும் ’டிப் பாட் தமிழா’ இசை ஆல்பம்

நடிப்பு-பாடல்-இசை-குரல் எல்லாம் அவரே..

15

தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத் தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி வந்த மன்சூர் அலிகான் தற்போது பிஸியான காமெடிய னாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
நடிகர் மன்சூரலிகான் 1994 ஆம் ஆண்டே சில்க் சிமிதா வை வைத்து “ சிக்குச்சான் சிக்குச்சான் சிக்குசிக்குச்சான் “ என்ற இசை ஆல்பத்தை ஏழு தெம்மாங்கு பாடல்களை கொண்டு தயாரித்து வெளியிட் டிருந்தார் அந்த பாடல்கள் அப்போதே மக்கள் மத்தியில் பிரபலமானது. அதுமட்டுமல் லாது அவர் நடித்த “ ராஜாதி ராஜ ராஜகுலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்ற படத்திற்கு ஐந்து பாடல்களோடு இசை அமைத்து அசத்தியிருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது “ டிப் டாப் தமிழா “ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி இருக் கிறார். இதில் அரசியல் விழிப்புணர்ச்சி பாடல், சமூகம், காதல், பாசம், உணர்வுகள் என்று பல பரிமாணங்களை கொண்ட ஆறு பாடல்களை கொண்டு இந்த “ டிப் டாப் தமிழா “ இசை ஆல்பத்தை உருவாக் கியதோடு, அதற்கு பாடல் வரிகளை எழுதி, பாடி, இசையமைத்து, நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகம் சார்ந்த பலவகையான சிந்தனைகளை மக்களுக்கு இந்த பாடல்கள் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக வும், அதோடு இன்றைய அரசியலை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த ஆல்பத்தை உருவாக்கி இருப் பதாகவும், நல்ல ஆடியோ கம்பெனியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இதன் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த போவதாகவும் தெரிவித் துள்ளார்.
90களின் வில்லன் நடிகர்கள் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் போன்றவர்கள் தற்போது வில்லன வேடங்களுக்கு பதி லாக காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளனர். பல ஹீரோக்கள் படங்களில் இருவரும் காமெடி நடிகராக நடித்து வருகின்றனர். மன்சூர் அலிகான் தனது மகனை ஹீரோவாக நடிக்க வைத்து கடமன்பாறை என்ற அப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதுதவிர ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டுள்ளனர்.
Villan Actor Mansoor Alikhan Releasing Music Album
Mansoor Alikhan, Music Albam, மன்சூர் அலிகான், இசை ஆல்பம்,

Leave A Reply

Your email address will not be published.