தென்னிந்திய சார்லி சாப்லின் நடிகர் நாகேஷ் காலமான தினமின்று..

16

த‌மிழ்த்திரையுல்கில் தனக்கென ஒரு பாணி ஏற்படுத்தி நகைச்சுவை நடிக‌ராக சாதித்தவர் நாகேஷ். இவ்ர் 1933ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி பிறந்தார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சாதனையாளர்.

இவரது இயற்பெயர் நாகேஸ்வரன். சினிமாவுகாக நாகேஷ்  ஆனார், கன்னட ராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழகத்தில் தராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் ரயில்வே அதிகாரியாக பணியாற்றி வந்தார். சிறுவயதில் வீட்டில் நாகஷை  குண்டப்பா, குண்டுராவ் என்றும தமாஷ் நண்பர்கள் அழைப்பார்கள்.  இவர் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய ரயில்வே இலாகாவில்  திருப்பூரில் நாகேஷ் கிளர்க்காக சேர்ந்தார்.

நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ்  நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய ‘டாக்டர் நிர்மலா’ நாடகத்தில், ‘தை தண்டபாணி’ என்ற பாத்திரத்தில் “தை, தை” என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், ‘தை நாகேஷ்’ என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை ‘தாய்’ என்று மாற்றி படித்ததால், இவர் “தாய் நாகேஷ்” என அழைக்கப்பட்டார்.

1959ம் ஆண்டில் தம்ரைக்குளம் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார்.  ஸ்ரீதரன் காதலிக்க நேரமில்லை படம் அவரை வெளியுலகுக்கு அடையாலம் காட்டியது. கே.பாலசந்தர்  கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம்  படத்தில் சிறப்பாக நடித்த பிரபலம் ஆனார். திருவிளையாடல் படத்தில் தருமி, தில்லானா மோகனாம்பாள் படத்தில்  வைத்தி  என்று நாகேஷ் ஏற்று நடித்த பாத்திரத்தை மறக்க முடியாது,.

எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி, கமல் என இந்த காலத்து ஹீரோக்கள் வரை அவர் நடித்திருக்கிறார். நீர்குமிழி படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தேன்கிண்ணம், . நவக்கிரகம்,  எதிர்நீச்சல், யாருக்காக அழுதான். அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தென்னிந்தியாவின் சார்லி சாப்லின் என்ற பாராட்டபெறும் நாகேஷ் கடந்த  2009ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி காலமானார். அவரது நினைவு தினமான இன்று அவர் புகழை போற்றுவோம்.

Leave A Reply

Your email address will not be published.