ஒளிப்பதிவு புதிய சட்டம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது

நடிகர் நாசர் அறிக்கை

0

நடிகர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
சமுதாய முன்னேற்றத் திற்கு திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந் திருக்கிறது, இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் நம்மை ஞாபகப் படுத்துகின்றன. இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின்போது அக்கால திரைப்படங்கள் அவ்வுணர்வை மக்களி டையே பரவ செய்ததற் கான சாட்சிகள் கருப்பு, வெள்ளை படங்களாக இன்றும் காண கிடைக் கின்றன. குறிப்பாக தமிழகத்தில் சமுதாய சீர்வை கொண்டுவந்ததில் திரைப்படங்கள் பெரும் பங்கு ஆற்றியிருக்கின் றன. இன்றைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே போதுமானதாக இருந்தும், இப்புதிய சட்டம் படைப் பாளிகளின் கருத்துக் களை முடக்கும் வண்ண மாய் இருக்கிறது. அரசுகள் மக்களின் பிரதிநிதி மக்கள் உணர்வுகளை என்றும் அவர்கள் செவி சாய்க்க வேண்டும், கருத்தில் கொள்ள வேண்டும். தமிழக மக்களின் பிரதிநிதியாய் இருக்கும் முதல்வர் .மு.க. ஸ்டாலின் இவ்விஷயம் குறித்து துறை சார்ந்தவர் களின் கவலையை ஆழமாக கேட்டறிந்து அதற் கான முன்னெடுப்பும் எடுத்திருக்கிறார் என்பது எங்களை நிம்மதி அடைய செய்வதாக இருக்கிறது. அவருக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி சொல்வது நம் கடமை. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

இவ்வாறு நடிகர் எம்.நாசர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.