நடிகர் நிதிஷ் வீரா  இன்று காலமானார்!

வெற்றி மாறன் இரங்கல்

2

 

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, அசுரன் படங்களில் குணச்சித்திரம் மற்றும்  வில்லன் படங்களில் நடித்தவர் நிதிஷ் வீரா.

கொரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

மறைந்த நிதிஷ் வீரா வின் சொந்த ஊர் மதுரை. 8′ வயதிலும், 7′ வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் கார் வாங்கிய இவர், தனது நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து காரை காட்டி அவர்களை காரில் அமர்த்தி  ஒரு ரவுண்ட் சுற்றிக்காட்டி மகிழ்ந் துள்ளார்.

 

நிதிஷ் வீரா மறைவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் இரங்கல் :

நண்பர் நித்திஷ் வீரா , உடல்நலம் குறித்து நேற்று விசாரித்தேன் . 2 நாட்க ளுக்குள் உடல்நலம் தேறிடுவார் என சொன் னார்கள் . ஆனால் இன்று காலை 6 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது .அவரை எனக்கு புதுப்பேட்டை படத்திலிருந்து தெரியும் .அப்போது நான் உதவி இயக்குனராக இருந்தேன். தனுஷ் மூலமாக எனக்கு பழக்கம் ஆனார் .அசுரனுக்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார் . அவருடைய இந்த இழப்பு அவர் குடும்பத் திற்கும் ,என்னைப்போல அவருக்கு தெரிந்தவர் களுக்கும் மிகப்பெரிய இழப்பு .

இவ்வாறு வெற்றிமாறன் கூறி உள்ளார்

Leave A Reply

Your email address will not be published.