ஒரே ஷாட்டில் 100 நடிகர்களை நடிக்க வைக்கும் பார்த்திபன்

லாக்டவுனில் பயிற்சி அளித்தார்

13

ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தில் ஒரே நடிகர் படம் முழுவதும் நடித்து இயக்கி சாதனை படைத்தார் பார்த்திபன். தனது அடுத்த படத்தில் புதிய சாதனை முயற்சி தயாராகிவிட்டார்.
கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட படம் ’ஒத்த செருப்பு சைஸ்-7’
இதில் ‘மாசிலாமணி’ என்கிற ஒரு கதாபாத்திரம் மட்டுமே படம் முழுவதும் நடித்திருக் கும் அந்த வேடத்தை பார்த்தி பனே ஏற்றிருந்தார் என்பது கூடுதல் சிறப்பு. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகப் பிரபலங்களும் இப்படத்தை பார்த்த் பார்த்திபனுக்கு பாராட்டு தெரிவித்தனர். இப்படம் ஆஸ்கர் விருதுக்காக விருதுக்கு பரிந்துரைக்கப் படும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்வு குழு தேர்வு செய்யவில்லை .இதனால் தமிழ்த் திரையுலகத் தினர் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மற்றொரு முயற்சியாக ஆஸ்கர் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ படத்தை நேரடியாக அனுப்பி வைக்க பார்த்திபன் பரிசீலித்து வருகிறார்.

 


உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாடு விருதுகளையும் இந்தப் படம் வென்றது.
வெளிப் படங்களில் மாறு பட்ட பாத்திரங்கள் ஏற்றாலும் தான் இயக்கும் அடுத்தப் படத்தையும் வித்தியாசமாக உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அதாவது புதிய படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கவுள்ளார். அப்படத் துக்கு. ‘இரவின் நிழல்’ எனப் பெயரிட்டுள்ளார் பார்த்திபன்.
ஒரேயொரு ஆளாக ‘ஒத்த செருப்பு’ படத்தில் நடித்த பார்த்திபன், இந்தப் புதிய படத்தில் ஒரே ஷாட்டில் 100 கதாபாத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்.
கொரோனா லாக் டவுன் காலத் தில் இதற்கான ஷாட்கள் கோர்த்து எப்படி கேமாரா கோணம் வைப்பது, நடிக்க விருக்கும் நடிகர்கள் எப்படி அணிவகுக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஒத்திகைப் பயிற்சி அளித்து வருகிறார். இந்தப் பயிற்சி தொடர்ச்சி யாக 35 நாட்கள் நடக்க உள்ள தாக தெரிகிறது. 10 நிமிடம் வரும் ஒரு நடிகருக்கு 20 நாட் கள் தொடர் பயிற்சி அளித்தி ருக்கிறார். மொத்தம் 2 மணி நேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக உள்ளது. சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய் கிறார்.
இப்படம் திரில்லர் கதையாக உருவாக உள்ளதாக தெரிவித் திருக்கிறார் பார்த்திபன்.

Leave A Reply

Your email address will not be published.