நடிகர் திலகத்தின் வாரிசு இளைய திலகத்துக்கு பிறந்தநாள் இன்று

திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..

12

நடிகர் திலகம் செவாலியே சிவாஜியின் புகழ் தமிழ் உள்ளவரையிலும்   நீங்காமலிருக்கும். அந்தளவுக்கு பல சாதனைகளை படைத்திருக் கிறார். அவர் போல் சாதித்தவர் முன்பும் இல்லை  பின்பும் யாராலும் முடியாது.

நடிகர் திலகத்தின்  வாரிசாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார் இளைய திலகம் பிரபு. அவரது பிறந்த நாள் இன்று. திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சங்கிலி திரைப் படம் மூலம் நடிகர் திலகத் துடன் இளைய திலகம் ஹீரோவாக அறிமுகமானார். சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார்.  கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங் களில் நடித்திருக் கும் நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.

பெங்களூருவில் உள்ள பிஷப் கார்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவரது சித்தப்பா வி. சி. சண்முகம் தனது அண்ணன் சிவாஜியின் திரைப்படங்களின் கால்ஷீட் மற்றும் அவருக்கு ஆலோச னைகள் வழங்கி தீர்மானிக் கும் நிலையில் இருந்தார். திரைப்பட நுணுக்கங்களை பிரபு சிறந்த முறையில் தனது சித்தப்பாவிடமே கற்றார்.
சிவாஜி யாரை வாழ்த்தினாலும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என இதயத்தின் அடித்தளத்திலிருந்து வாழ்த்துவார் அவரை வாழ்த்தும் ஆசியும் என்றென்றைக்கும் இளைய திலகம் பிரபுவுக்கும் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave A Reply

Your email address will not be published.