நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

23

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்த நாள். அவரது பிறந்த நாளையொட்டி நேற்று காமன் டி பி வெளியிடப் பட்டது, அதில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர், ரஜினியை போலவே ராகவேதிரர் பக்தர். லாரன்ஸ் ஒரு நடிகர், நடன இயகுனர், திரைப்பட இயக்குனர் என்பதையெல்லாம் தாண்டி மனித நேயம் மிக்கவர். மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வளித்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதுடன் பல்வேறு ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி இருக்கிறார்.    பெப்சி தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கில் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்பட்டபோது அவர்களுக்கு கோடிகளில் நிதி கொடுத்து உதவினார்.

லாரன்ஸ் தமிழில் இயக்கிய காஞ்சனா படத்தை இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் இயக்கினார். அப்படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. அவர் நடிக்கும் புதிய பட அறிவிப்பு இன்று வெளியாகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.